நாகை மாவட்டம் திருமருகல் அருகில் உள்ள கேதாரிமங்கலம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு டி.எஸ். திருவேங்கடம், தீவிரமான இயக்கத் தோழர். குறிப்பாக என்னிடத்தில் மிகுந்த அன்பு பாராட்டியவர். அவர் மறைந்த பின்பும் அந்தக் குடும்பத்தார் அனைவரும் நமது இயக்கத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர்களாவர்.
மகனும், திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகத்தின் தலைவருமான மானமிகு தி. வீரமணி அவர்கள் மறைவுற்றார் (11.3.2025) என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
அவரது மறைவின்மூலம் நல்ல ஒரு செயல் வீரரை இழந்துள்ளோம். அவர் தனது தந்தையைப் போன்றே இயக்கத்திற்குத் தொண்டாற்றிய நம் தோழராவார்.
அவரது வாழ்விணையர் திருமதி ஜீவா மற்றும் பிள்ளைகள் வீ. விஜய், வீ. வினிதா, வீ. கவுசல்யா, சகோதரர்களான தி. குணசேகரன், திருவேங்கடரவி, தி. இளங்கோவன், தி.காமராஜ், தி. சிங்காரவேலு, தி. இராஜேந்திரன் மற்றும் உறவினர்களுக்கும், நாகை மாவட்ட – அவ்வட்டாரத் தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த துயரத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்!
முகாம்: சிட்னி, ஆஸ்திரேலியா
13.3.2025
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்