பெங்களூர், மார்ச் 13 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வரும் போது கருநாடக மாநில விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். காவல்துறை விசாரணைக் குப் பின் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-
யூகம்தான்
ரன்யா ராவ் தங்கம் கடத்தல் விவகாரத் தில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள் ளனர் என்ற செய்தி வெறும் யூகம்தான். எந்த அமைச்சர்கள் பெயர் வெளியானது? யாராவது பார்த்தீர்கள் அல்லது கேட்டீர்களா?. அரசியல்வாதிகளாகிய நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக் கணக்கான மக்கள் எங் களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள். என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர் புடையவர் என அர்த்தமா?. என்னுடனோ அல்லது முதல்வருடனோ போட்டோ எடுத்துக் கொண்ட ஒரு நபர், குற்றச்செயலில் ஈடுபட்டால் அவருக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று அர்த்தமா?.
ரன்யா தங்கம் கடத்தல் வழக்கில் பாஜக-வுக்கு தொடர்பு இருக்கலாம், ஆனால் காங்கிரஸ்க்கு தொடர்பு இல்லை. எந்த அமைச்சரும் இதுபோன்ற ஊழல்களில் ஈடுபட மாட் டார்கள். முதலமைச்சர் விசா ரணைக்கு உத்தரவிட் டுள் ளார். இவ்வாறு டி.கே. சிவக் குமார் தெரிவித்துள்ளார்.