கோவை, மார்ச் 13- 9.3.2025 அன்று மாலை 6 மணி அளவில் கோவை காமராசர் நகர் கண்ணப்பன் அரங்கில் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ. பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார்
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா ஜெயக்குமார் கழக செயல்பாடுகள், அமைப்பு பணிகள், பிரச்சார பணிகள், விடுதலை சந்தா சேகரிப்பு மற்றும் புதுப்பிப்பு மற்றும் பெரியார் உலகம் குறித்து சிறப்புகளை விரிவாக எடுத் துக் கூறி வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநகர தலை வர் செந்தில்நாதன், மாநகர செயலாளர் புலியகுளம் க.வீர மணி, வடக்கு பகுதி செயலாளர் ச.திராவிடமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.ராசா, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஆர்.வெங் கடாசலம், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், க.கோபாகிருஷ்ணன், சா.சிவகுமார், லூக்காஸ் பீட்டர், சா.திலகமணி, வ.ராஜேஸ்வரி, எ.எஸ்.ராஜா, நா.குரு, ஆவின் சுப்பையா, கே.எஸ் சிவகுமார், மற்றும் ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பக காப்பாளர் அ.மு.ராஜா, உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். நிறைவாக தெற்கு பகுதி செயலாளர் தெ.குமரேசன் நன்றியுரையாற்றினார்.
தீர்மானங்கள்
15.2.2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு கோவை மாவட்டத்தில் விடுதலைச் சந்தா புதுப்பித்து வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி பெரியார் சிலையுடன் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு கோவை மாவட்டத்தின் சார்பில் பெருமளவில் நிதி வசூல் செய்து தருவதென முடிவு செய்யப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதி களிலும் கழகப் பிரச்சார கூட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் ஹிந்தி, சமஸ்கிருதத்தை எதிர்த்து பண் பாட்டு பாதுகாப்பு பரப்புரை பொதுக்கூட்டம் மேட்டுப் பாளையத்தில் ஏப்ரல் 22இல் நடைபெறும் கூட்டத்தில் கோவையில் இருந்து அனைத்துத் தோழர்களும் பெரும் திரளாக கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக தெற்கு பகுதி செயலாளர் தெ.குமரேசன் நன்றியுரையாற்றினார்.