சீன விஞ்ஞானிகள் மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த ‘காக்டெய்ல்’ நானோ தடுப்பூசியை எலிகள் மீது நடத்திய சோதனை வெற்றி என நான்ஜிங் அறிவியல் & தொழில்நுட்ப யுனிவர்சிட்டி தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் பல லட்சம் பேருக்கு பயனளிக்கும். உலக அளவில் ஒவ்வொரு 34 வினாடிகளுக்கும் ஒருவர் இருதய நோயால் இறப்பதாக அமெரிக்க இதய சங்க அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.