பள்ளிகளில் ஏஅய் கட்டாயமாகிறது… சீனாவின் 20 ஆண்டு திட்டம்

Viduthalai
2 Min Read

பெஜ்யிங், மார்ச் 12 20 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா இப்போதுதான் புதிய கல்விக் கொள்கையை தயாரிக்கத் தொடங்கியுள்ளது தொடக்கப் பள்ளிகளில் ஏஅய் சிறப்புப் பாடத்தை கட்டாயமாக்கியுள்ளது.

நுண்ணறிவுப் படிப்பு

சீனா தனது கல்வியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் இன்னும் குழப்பத்தில் இருக்கும் ஒரு மாற்றம்தான் ஆனால் சீனா துணிந்து இறங்கி உள்ளது. சீனாவில் தொடக்க, இடைநிலைப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு படிப்பை கட்டாயமாக்கி உள்ளது. இந்தக் கல்விக் கொள்கை அடுத்த 20 ஆண்டுகளுக்கான அந்நாட்டின் முன் தயாரிப்பாகக் கருதப்படுகிறது.
சீனாவின் கல்வி முறையில் இந்த மாற்றம் இந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும். இதன் கீழ், சீனாவில் உள்ள தொடக்க, இடைநிலைப் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் செயற்கை நுண்ணறிவைப் படிக்க வேண்டும். இதனால் இந்த மாணவர்கள் எதிர்கால சவால்களுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும்.

சீனா ஏஅய் கல்வியை மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளது. இதில், ஆரம்ப கட்டத்தில், அதாவது சிறு குழந்தைகளுக்கு ஏஅய் பற்றி மேலோட்டமாகச் சொல்லிக் கொடுக்கப்படும். அது மக்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்ற விவரங்களை எடுத்துரைக்கும். அடுத்த கட்டமாக மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கு ஏஅய் தொழில் நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து கற்பிக்கப்படும். மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி என்ன மாதிரியான புதுமைகளைச் செய்யலாம் என்று பாடம் நடத்தப்படும்.

வலிமையான தொழில் நுட்பம்

அடுத்த 20 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு சீனா கல்வி முறையில் இந்த மாற்றங்களைச் செய்துள்ளது.சீனா ஏஅய் துறையில் மிகப்பெரிய சக்தியாக மாற விரும்புகிறது. இதனால்தான் நாட்டில் படிக்கும் குழந்தைகளை செயற்கை நுண்ணறிவில் திறமை யானவர்களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நம்பப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் புதுமை, தொழில்நுட்பத்தில் வலிமை யானவர்களாக மாற முடியும். சீனாவின் இந்த முயற்சியின் தாக்கம் அடுத்த 20 ஆண்டுகளில் தெரியும். இதுவே சீனாவின் திட்டமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் சீனா தொடக்கப் பள்ளிகளில் இருந்தே ஏஅய் தொழில் நுட்ப பாடங்களை கட்டாயமாக்கியுள்ளது. அவர்கள், எதிர்காலம் ஏஅய்க்கு சொந்தமானது என்று நம்புகிறார்கள்.

புதிய வாய்ப்புகள்

சீன கல்வி அமைச்சர் ஹுவா, ஜின்பிங்கை மேற்கோள் காட்டி சீன ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ”இந்த ஆண்டு சீனா செயற்கை நுண்ணறிவு குறித்த புதிய வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளது. இது கல்வித் துறையில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும். ஏஅய் கல்வியின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான திட்டங்கள், வழிகாட்டுதல்களை உள்ளடக்கும்.
கல்வியில் செயற்கை நுண் ணறிவைச் சேர்க்கும் முயற்சி முதன்முதலில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப் பட்டது. அங்கு இதற்கான சட் டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதேபோல் இத்தாலியிலும் சிறு குழந்தைகளுக்கு அவர்களின் டிஜிட்டல் திறன்களை வளர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் பற்றி சொல்லிக் கொடுக் கப்படுகிறது.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *