புதுடில்லி, மார்ச் 12 இந்தியாவில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக ஹிந்தி மொழியை கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.. இந்த நிலையில், இந்தியாவில் ஹிந் தியை தவிர மேலும் சில மொழிகள் அதிகம் பேசப்படுகின்றன.
பிற மொழிகள்
கடந்த சில வாரங்களாகவே, தமிழ் நாட்டு மக்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்தியாவை ஆளும் ஒன்றிய அரசை பொறுத்துவரை, இந்தியாவில் இருக்கும் அனைவரும் ஹிந்தி கற்றுக்கொண்டு அனைவரும் ஒரே மொழியை பேச வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடாக உள்ளது. ஹிந்தி மொழியை கற்றுக்கொண்டு தன் தாய் மொழியை தவற விட்ட மாநிலங்களும் இருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் ஹிந்தியை தவிர பிற மொழிகளும் பேசப்படுகின்றன.
அவை என்னென்ன தெரியுமா?
இந்தியாவில் கிட்டத்தட்ட 9 கோடிக்கும் மேற்பட்டோர் வங்க மொழியை பேசுவதாக கூறப்படுகிறது. இந்திய ஜனத்தொைக யில் மொத்தம் 8.03 சதவீதம் பேர் இந்த மொழியை பேசுகின்றனராம்.
இந்திய மக்கள் தொகையில் மொத்தம் 6.86 சதவீதம் பேர் மராத்தி மொழியை பேசுகின்றனராம். இதில் மொத்தம் 8.3 கோடி பேர் பேசுகின்றனர்.
இந்தியாவில் இருக்கும் மக்களில் 8.11 கோடி பேர் தெலுங்கு மொழியை பேசுகின்றனராம். இது, மொத்த ஜனத்தொகையில் 6.7 சதவீதம் ஆகும்.
தமிழ்
2024ஆம் ஆண்டின் கணக்கெடுப் பின் படி, இந்தியாவில் மொத்தம் 6.9 கோடி பேர் தமிழ் மொழியை பேசுகின்றனராம். தமிழ்நாடு புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் ஆகிய பகுதிகளிலும் தமிழ் மொழி பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2011ஆம் ஆண்டின் கணக்குபடி, இந்திய ஜனத்தொகையில் மொத்தம் 4.5 சதவீதம் பேர் குஜராத்தி மொழியை பேசுகின்றனராம். இது, இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் 6ஆம் இடத்தை பெற்றுள்ளது.
2011ஆம் ஆண்டின் கணக் கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகையில் 4.19 சதவீதம் பேர் உருது மொழியை பேசுகின்றனராம். உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட இடங்களில் இந்த மொழி அதிகம் பேசப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் மொத்தம் 4.37 கோடி பேர் கன்னட மொழியை பேசுகின்றனராம். அதிகமாக கருநாடகா, தமிழ்நாடு, மகாராட்டிரா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இடங்களில்தான் கன்ன டம் பேசுவோர் அதிகமாக இருக்கின்றனராம்.