தேவர், தேவன், தெய்வம், தேவரு, தேவுடு எல்லாம் ஒரே பொருள் கொண்டவை. அத் தேவர்களில் பலரைப் பொறுக்கி எடுக்கத்தான் அவர்களுக்காகப் புராணங்களும், இதிகாசங்களும் தொகுத்து அவர்களைச் சமயத்திற்கு ஏற்றபடி, சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி, தேவைக்கு ஏற்றபடி கடவுளாகக் கூறப்பட்டு வருகின்றது. பின்னால் உண்டாக்கப்பட்ட கடவுள் என்ற சொல்லும்கூட ஏதாவது ஒரு பொருளைக் குறிப்பதாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’