தீபாவளி ஒட்டிய பட்டிமன்றம் ஒன்றிற்கு நடுவராக இருந்த சாலமன் பாப்பையா, ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி, மருத்துவத்தை நமக்கு அளித்தனர் என்று பேசிவிட்டாராம்!
ஆகா, அது எப்படிப் பேசலாம் சாலமன் பாப்பையா என்று ‘அத்திரிபாச்சா கொழுக்கட்டை’ என்று ஹிந்து முன்னணி குதியாய்க் குதிக்கிறது.
அவர் சொன்னதில் என்ன தவறு? ஆங்கிலேயர்களை அண்டிப் பதவி வாங்கிய கூட்டமா இப்படியெல்லாம் பேசுவது? சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சாலமன் பாப்பையா சொன்னது உண்மைதான்.
‘‘சூத்திரர்களுக்குக் கல்வியைக் கொடுக்காதே – அவன் படித்தால் நாக்கை அறுக்கவேண்டும்” என்று சொன்ன கூட்டமா இப்படி எல்லாம் எகிறிக் குதிப்பது?
நோய் என்பது மனிதன் செய்த பாவத்துக்குக் கடவுள் கொடுத்த தண்டனை – கர்ம பலன் என்பவர்களுக்கு சாலமன் பாப்பையா சொன்னது கசக்கத்தானே செய்யும்!