புதுடில்லி,மார்ச் 11- ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 2024ஆம் ஆண்டுக்கானநேர பயன்பாட்டு ஆய்வறிக்கையை (டியுஎஸ்) வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி-டிசம்பர் வரையில் தேசிய அளவில் 1.39 லட்சம்குடும்பங்களைச் சேர்ந்த 4.54 லட்சம் நபர்களிடம்(6 வயதுக்கு மேல்) இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
சதவீதம் அதிகரிப்பு
அதில் கிடைத்த முக்கிய முடிவுகள் பின்வருமாறு:
1) 15 முதல் 59 வயதுக்கு உட்பட்ட ஆண்கள்மற்றும் பெண்கள் ஒரு நாளில் வேலைவாய்ப்பு மற்றும்அது தொடர்புடைய நடவடிக்கைகளில் பங்கேற்பது2019ஆம் ஆண்டில் முறையே 70.9 சதவீதம் மற்றும் 21.8 சதவீதமாக இருந்தது. இது, 2024இல் 75சதவீதம் மற்றும் 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2) 2024இல் 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்டஇந்தியர்களில் 41 சதவீதம் பேர் வேலைவாய்ப்புமற்றும் அது தொடர்பான நடவடிக்கை களில் ஈடுபட்டனர். இது, 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 3சதவீதம் அதிகம். இந்தியர்கள் சராசரியாக ஒரு நாளில் 440 நிமிடங்களை வேலைக்காக செலவிடுகின்றனர்.
3) ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவழித்த சராசரி நேரம் 129 நிமிடங்கள் ஆகும். இது, 2019உடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் சரிவு. குடும்ப உறுப்பினர்களுக்காக ஊதியம் இல்லாத சேவைகளில் (பராமரிப்பு நடவடிக்கைகள், தன்னார்வ பணி மற்றும் பயிற்சி) பெண்கள் சராசரியாக 289 நிமிடங்களை செலவிடுகின்றனர். அதேசமயம் ஆண்கள் இதற்காக செலவழிக்கும் நேரம் ஒரு நாளைக்கு 88 நிமிடங்கள் மட்டுமே. ஆக, ஊதியம் ஏதும் இல்லாத குடும்பத்தை கவனிக்கும் வேலைக்காக ஆண்களைவிட பெண்கள் ஒரு நாளைக்கு 201 நிமிடங்களை அதிகமாக செலவிட் டுள்ளனர்.
4) கடந்த 2019இல் ஊதியமில்லா வேலையில் 83.9 சதவீதம் பெண்கள் ஈடுபட்ட நிலையில் 2024இல் 84 சதவீதம் ஆக இருந்தது. ஊதியம் பெறும் வேலையில் ஈடுபடும் பெண்கள் எண்ணிக்கை 17.1 சதவீதத்திலிருந்து 20.6 சதவீதமாக அதிகரிக்துள்ளது.
5) ஆண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை கவனித்து கொள்வதற்காக ஒரு நாளில் 75 நிமிடங்களை செலவிடுகிறார்கள். அதேநேரம், பெண்கள் அதற்காக சுமார் இரண்டு மடங்கு நேரத்தை (137 நிமிடங்கள்) செலவிடுகிறார்கள்.
6) 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 89.3 சதவீதம் பேர் கல்வி கற்பதில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தகைய நடவடிக்கைகளுக்காக அவர்கள் ஒரு நாளைக்கு 413 நிமிடத்தை செலவிடுகின்றனர்.
7) 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் கலாச்சாரம், ஓய்வு மற்றும் ஊடக பயன்பாடு தொடர்பான நடவடிக்கைகளில் நாளொன்றுக்கு சராசரியாக 171நிமிடங்களை செலவிடுகின்றனர். ஆண் மற்றும் பெண் முறையே 177 நிமிடங்கள் மற்றும் 164 நிமிடங்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்காக செலவிடுகின்றனர்.
8) 2014இல் சமூகமயமாக்கல் மற்றும் தொடர்பு, சமூக பங்கேற்பு மற்றும் மதப் பழக்கவழக்கங்களுக்காக 5 நிமிடங்களுக்கும் குறைவாக மட்டுமே செலவிட்ட நிலையில், 2019இல் 130 நிமிடங்களை இந்தியர்கள் செலவிட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.