இந்தியாவில் தொண்டு செய்த அன்னை தெரசா உட்பட, இதுவரை அமைதிக்கான நோபல் பரிசு 134 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 17 பேர் பெண்கள்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் ஆராய்ச்சியாளர் ஆல் பிரட் நோபல், 1895ஆம் ஆண்டு எழுதிய உயிலின்படி, இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர் களுக்கும், உலக அமைதிக்காகப் பாடுபட்டவர்களுக்கும் ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படு கிறது.
அமைதிக்கான நோபல் பரிசு பெறு பவர்களை, நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள நார்வேஜியன் நோபல் கமிட்டியும், மற்ற துறைகளில் பரிசு பெறுபவர்களை சுவீடன் தலை நகரான ஸ்டாக்ஹோமில் உள்ள கரோ னலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்டில் உள்ள நோபல் பரிசு குழுவும் தேர்வு செய்கிறார்கள்.
1901ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை மொத்தம் 962 பேர் நோபல் பரிசு பெற்றிருக்கின்றனர். அவர்களில் 58 பேர் பெண்கள். அதாவது, கடந்த 119 ஆண்டுகளில் 6.05 சதவிகித பெண்கள் இப்பரிசை பெற்றுள்ளனர்.
இந்தியாவில் தொண்டு செய்த அன்னை தெரசா உட்பட, இதுவரை அமைதிக்கான நோபல் பரிசு 134 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 17 பேர் பெண்கள்.
அமைதிக்கான பரிசுக்கு அடுத்து, இலக்கிய துறையில்தான் பெண்கள் அதிக நோபல் பரிசுகளை வென்றுள் ளனர். இலக்கியத்துக்காக இதுவரை 117 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 16 பரிசை பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
இலக்கியத்துக்கு அடுத்தபடியாக பெண்கள் மருத்துவத்துறையில் பரிசு களை பெற்றுள்ளனர். இதுவரை மொத் தம் 222 பேர் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு பெற்றுள்ள நிலையில், அவர்களில் பெண்கள் 12 பேர்.
1903இல் நோபல் பரிசுபெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் மேரி கியூரி. இவர் ரேடியம் எனும் தனிமத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து, ஆராய்ந்ததற்காக 1911ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். அவர் பரிசு பெற்று 24 ஆண் டுகள் கழித்து, அவரது மகள் அய்ரின் கியூரி 1935ஆம் ஆண்டு வேதியியலுக் கான நோபல் பரிசு பெற்றார். வேதியியல் துறையில் இதுவரை 186 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் 7 பேர் பெண்கள் ஆவர்.
இயற்பியல் துறையில் 216 பேருக்கு இதுவரை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் பெண்கள். 2020ஆம் ஆண்டு இயற்பியலுக்கான பரிசை பெற்றவரில் ஆண்ட்ரியா கெஸ் என்ற பெண்ணும் ஒருவர்.
இதுவரை அளிக்கப்பட்ட நோபல் பரிசுகளில் 2009ஆம் ஆண்டு 5 பெண்களுக்கும், 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் 4 பெண்களுக்கும் அளிக்கப்பட்டதே ஒரு ஆண்டுக்கான அதிகபட்ச அளவாகும்.