வடசென்னை, மார்ச்9- வட சென்னை கொடுங்கையூரில் 8.3.2025 அன்று இரவு தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் இல்லத் தில் வட சென்னை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் கடவுள் மறுப்புடன் தொடங்கி நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் வ.கலைச்செல்வன் வரவேற்றார். சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல் படுத்துவது குறித்தும், சென்னை அரசு பொது மருத்துவ மணைக்கு தந்தை “ பெரியாரின்” பெயர் சூட்டியதற்காகவும், திராவிட மாடல் அரசிற்கு நன்றி தெரிவித்தும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு, ஹிந்தித் திணிப்புப் போன்ற பிரச்சினைகளில், தமிழ்நாடு அரசின் தொடர் செயல்பாடுகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தும் தெருமுனைப் பிரச்சார கூட்டங்களை ஏன் கூட்ட வேண்டும் எனவும் திராவிடர் கழகத்தின் மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தெளிவாகவும், விளக்கமாகவும் உரையாற்றினார். பின்னர் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் ஆசிரியரின் உழைப்பைக்குறித்தும், கழகத்தின் தேவை குறித்தும் பேசினார். அயன்புரம் பகுதி தலைவர் துரைராசு ஒரு பகுதியில் ஒரு தோழர் இருந்தாலும் அவர் தைரியமாக கொள்கைப்பணியை முன்னெடுக்கலாம், அதற்கு நானே உதாரணம் என்று குறிப்பிட்டுச் சொன்னார். மாவட்டசெயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் பேசும் போதும், இளைஞ ரணித் தோழர்கள் முன்னெடுக்கும் பிரச்சாரத் திற்கு பெரும் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினார். சட்டக்கல்லூரி மாணவர் தேனி பூவரசன் பேசும் போது தன்னுடைய தந்தை ஒரே ஆளாக இருந்த பகுதியில் இன்று பெருவாரியான உறுப்பினர் இருப்பதைப் பற்றி கூறினார்.
கூட்டத்திற்கு தலைமை யேற்ற தே.செ.கோபால், பேசிய அனைவரின் கருத்துகளையும் செயல் படுத்திட கட்டியம் கூறிடும் வகையில் ரத்தினச் சுருக்கமாக உரையாற்றினார். கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் இனிப்பு மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. இறுதியாக வட சென்னை மாவட்ட திராவிட மாணவர் கழகம் தலைவர் ச.சஞ்சய் அனவருக்கும் நன்றி நல்கிட இனிதே கலந்துரையாடல் கூட்டம் நிறைவுபெற்றது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பெரியாரை உலகமய மாக்கும் திட்டத்தில், பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2 வார நிகழ்வில் பங்கேற்க ஆஸ்திரேலிய சென்று உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பயணம் வெற்றி பெற இக்கூட்டம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
சென்னை கொளத்தூ ரில் பெரியார் நகரில் ரூபாய் 210 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு ”பெரியார் அரசு மருத்துவமனை” என்ற பெயர் சூட்டி மற்றும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு, ஹிந்தித் திணிப்புப் போன்ற பிரச் சினைகளில், தமிழ்நாடு அரசின் தொடர் செயல் பாடுகளைக் இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரி வித்துக் கொள்கிறது.
சிதம்பரத்தில் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் விளக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு ”பெரியார் அரசு மருத் துவமனை” என்ற பெயர் சூட்டியது மற்றும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு, ஹிந்தித் திணிப்புப் போன்ற பிரச் சினைகளில், தமிழ்நாடு அரசின் தொடர் செயல்பாடுகளைப் பாராட்டி வட சென் னையில் “ பெரிய மேடு, புரசைவாக்கம் வெள்ளார்தெரு, ஓட்டேரி அய்ந்து விளக்கு, கொளத்தூர் மற்றும் முத்தமிழ்நகர் ஆகிய பகுதிகளில் தெரு முனைப்பிரச்சாரக் கூட்டம் நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர் மானிக்கப்படுகிறது
வட சென்னை மாவட் டத்தில் பகுதிவாரியாக சுவரெழுத்துப் பிரச்சாரம், கழக கொடிக்கம்பங்கள் ஏற்றி புதிய கிளைகள் தொடங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.