தமிழ்நாடு அரசின் செயல்பாட்டின் எதிரொலி : தொகுதி மறு சீரமைப்பு பிரச்சினை தெலங்கானாவிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம்

1 Min Read

அய்தராபாத், மார்ச் 9- தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழ் நாட்டைத் தொடர்ந்து தெலங்கானாவிலும், அனைத்துக் கட்சி கூட் டத்தை கூட்டுவதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

தொகுதி மறுசீரமைப்பு
நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீர மைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் செய்தால், குடும்பக்கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல் படுத்திய தமிழ் நாடு உள்ளிட்ட தென் மாநிலங் களுக்கு பாதிப்பு வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரி வித்தார். இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி விவாதித்தார்.

பின்னர். இது தொடர் பான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தென்மாநிலங்களின் கூட்டுக் குழுவை ஏற்படுத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா, நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகளை தவிர அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டன.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலங்கா னாவிலும் தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் அபாயம் குறித்து விவாதிப்ப தற்காக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வரு கிறது. முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி தலை மையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் துக்கு பின்னர் இதுபற்றி தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் பொங் குலேட்டி சிறீனி வாஸ் ரெட்டி செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்றதொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களுக்கு தீங்கி ழைக்க ஒன்றிய தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசு விரும்புகிறது.தென்னிந்தியாவில் உள்ள தொகுதிகளின் எண் ணிக்கை விகிதாசார அடிப்படையில் அதிகரிக் கப்பட வேண்டும். இது தொடர்பாக விவா திக்க மாநிலத்தில் அங்கீ கரிக்கப்பட்ட கட்சி களின் கூட்டம் நடை பெறவுள்ளது. இந்த கூட்டத்துக்கு துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்கா மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் கே.ஜனாரெட்டி ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *