இந்தியா முழுவதும் எத்தனை ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன என ஆராய்ந்து கொண்டிருந்தேன். எப்படி ஒரு ஆசிரியரை வைத்து மூன்று மொழிகளை கற்பிக்கின்றனர் என ஆராயும்போது பல தகவல்கள் கிடைத்தன. குஜ்லிஷ் என்பதை பற்றியும் வாசிக்க நேர்ந்தது. ஆங்கில ஸ்கிரிப்ட் வைத்து குஜராத்தி மீடியம். சூரத்தில் பள்ளிக்கல்வித்துறையே இப்படி ஒரு ப்ராஜக்ட் செய்துள்ளனர். விளைவுகள் கிடைக்கவில்லை. 2012ஆம் ஆண்டுவரை குஜராத்தி மீடியம் / ஆங்கில மீடியம் என்பது 70:30 என இருந்தது 2023இல் தலைகீழாகிவிட்டது என்கின்றனர். 30:70. புதிய தேசிய கல்விக்கொள்கையின் படி அடிக்கடி இங்கே கேட்கும் வசனம் “தாய்மொழி வழியே கல்வி” என்பதை அமல்படுத்த அனைத்து பள்ளிகளும் குஜராத்தி மீடியத்திற்கு மாற்றிடுவார்களா?
ஓராசிரியர்கள் பற்றி தேடப்போய் ஆண்-பெண் ஆசிரியர்கள் விகிதாச்சாரத்தில் நின்றுவிட்டேன். தமிழ்நாட்டை வியக்காமல் இருக்கமுடியவில்லை.
இந்திய அளவில் எல்லா பள்ளிகளிலும் ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கை – 45,77026
இந்திய அளவில் எல்லா பள்ளிகளிலும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை – 52,30574
இந்திய அளவில் எல்லா பள்ளிகளிலும் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை – 98,07600
ஆண்கள் – 46.7 சதவீதம், பெண் – 53.2 சதவீதம்
தமிழ்நாட்டில் எல்லா பள்ளிகளிலும் ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கை – 1,35431
தமிழ்நாட்டில் எல்லா பள்ளிகளிலும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை – 4,15127
தமிழ்நாட்டில் எல்லா பள்ளிகளிலும் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை – 55,0558
ஆண்கள் – 24.6 சதவீதம், பெண் – 75.4 சதவீதம்
மூன்று மடங்கிற்கும் அதிகம். பெண்கள் அவ்வளவு தூரம் படிக்க வைக்கப்பட்டிருகின்றார்கள். இந்த சதவிகித வளர்ச்சியின் பின்னால் எவ்வளவு திட்டமிடல், சமூகப் புரிதல், அரசின் திட்டங்கள், பள்ளிக்கல்வி மாற்றங்கள் இருந்திருக்க வேண்டும். அவ்வளவு எளிதாக அடைந்திடமுடியாதில்லையா?
– விழியன் முகநூலிலிருந்து
ஒரு முகநூல் பதிவு

Leave a Comment