சிவகாசி, மார்ச் 7- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இருவருக்கு “இந்திய தொழில்நுட்பக் கல்வி கழக சிறந்த மாணவர் விருது” (ISTE Best Student Award – 2024) வழங்கப்பட்டது.
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இயங்கும் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழத்தின் வாயிலாக தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதன் மூலம் மாணவ, மாணவியரின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்மேம்பாடு ஆகியவை உறுதி செய்யப்படுகிறது. கல்வி, பிற துறைசாரா செயல்பாடுகள் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் செயல்பாடுகளில் சிறப்பான பங்கினை ஆற்றியதற் காக இக்கல்லூரியின் மாண வர்கள் இருவர் விருதுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டனர்.
28.02.2025 அன்று சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழக தமிழ்நாடு பிரிவின் கீழ் நடைபெற்ற பாலிடெக்னிக் மாணவர் ஆண்டு கூட்டத்தில் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிரிவின் தலைவர் முனைவர் எஸ்.சங்கர சுப்பிரமணியன் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழக சிறந்த மாணவர் விருதை (ISTE Best Student Award – 2024) வழங்க இக்கல்லூரியின் மூன்றாமாண்டு மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் துறை மாணவர் செல்வன் அ.நசீர் அகமது மற்றும் மூன்றாமாண்டு இயந்திரவியல் துறை மாணவர் செல்வன் ச.பரத் ஆகியோர் பெற்று கொண்டனர். இப்பெருமைமிகு விருதுகளைப் பெற்ற மாணவர்களை இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.