திருச்சி, மார்ச் 7- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந் தியல் பட்டயப்படிப்பு (D. Pharm.) மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வினை பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறையின் மூலம் MedPlus Pharmacy 24.10.2024 அன்றும் Apollo Pharmacy 26.10.2024 அன்றும் நடத்தியது. மாணவர்கள் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது நடைபெற்ற இந்நேர்முகத்தேர்வில் MedPlus Pharmacy நிறுவனத்தால் 43 மாணவர்கள் பணிநியமனம் பெற்றனர். 18 பேர் இரண்டு நிறு வனத்தாலும் தெரிவு செய்யப்பட்டு, தற்போது 34 பேர் Apollo Pharmacy நிறுவனத்திடமிருந்து பணி நியமனம் பெற்றனர்.
அவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்வு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் 04.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, மருந்தியல் பட்டயப்படிப்பின் முதன்மையர் பேரா. கே. சக்திவேல், பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. எம்.கே.எம். அப்துல் லத்தீஃப் மற்றும் பேராசிரியர் ஷாமலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் 34 பேருக்கும் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. மருத்துவமனையில் பயிற்சி நிறைவு செய்தவுடன் ரூ.18,000/- மாத ஊதியத்தில் மருந்தாளுநராக பணி நியமனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.