திருச்சி மாவட்டத்தின் மேனாள் மாவட்ட தலைவரும், தந்தை பெரியார் அவர்களின் தனி உதவியாளராகவும் பணியாற்றிய காலம் சென்ற த.மகாலிங்கம் அவர்களின் துணைவியார் திராவிட ராணி (வயது (77), திருச்சி முல்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார், இவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கை அதிகாரியாவார் ஓய்வுக்கு பின் நமது பெரியார் நிறுவனத்தில் ஓராண்டு காலம் தணிக்கை அலுவலராகவும் பணியாற்றினார். இவருக்கு பெரியார் செல்வன் என்ற மகனும் யாழினி, என்ற மருமகளும் இரண்டு பெயர்த்திகளும் உள்ளனர்.
நன்கொடை
குன்றத்தூர் மு.திருமலை-அலமேலு ஆகியோரின் 22ஆம் ஆண்டு (7.3.2025) வாழ்க்கை இணையேற்பு நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளனர்.