சென்னை, மார்ச் 7 தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித் துள்ளார். ஊரக உள்ளாட்சிக ளுக்கு தனி அதிகாரிகள் நியமனம், கனிமம் உள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். முன்னதாக, கனிமங் களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப் பது தொடர்பான சட்ட மசோதா கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப் பட்டது. 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு களை நிர்வகிக்க தனி அலுவலர்களை அரசு நியமிப்பது தொடர் பான சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்டது. இந்தநிலையில், சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட 2 சட்ட மசோ தாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஊரக உள்ளாட்சி களுக்கு தனி அதிகாரிகள் நியமனம், கனிமம் உள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநரிடம் ஒப்பு தலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களை அவர் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், 2 மசோதாக் களுக்கு இன்று (7.3.2025) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.