அரசு பள்ளிகளில் டிஜிட்டல் நூலகங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச்.7- தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள நூலகங்கள் 99.9 சத வீதம் டிஜிட்டல் மயமாக மாறி விட்டன என்று தகவல் வெளியாகி உள்ளது.

டிஜிட்டல் நூலகங்கள்

அறிவின் புதையலாக வும், அறிவுக் கிடங்காகவும் இருக்கக் கூடிய புத்தகங்க ளுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடிய இடமாக நூலகங்கள் விளங்குகின்றன. உலகில் கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் மேற்பட்ட நூலகங்கள் இருப்பதாக சொல் லப்படுகிறது.
இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட நூலகங்கள் மக்களின் அறிவுக் கண்ணை திறந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூல கங்களுக்கு சென்று தேடிப் பிடித்து புத்த கங்களை படித்த காலம் மாறி, தற்போ தைய தொழில்நுட்ப உலகில் புத்தகங் களை டிஜிட்டல் நூலகங்களில் உட் கார்ந்த இடத்திலேயே தேடி படிக்கும் நிலை உருவாகிவிட்டது.

இந்தியாவை பொறுத்த வரையில் மாணவ-மாணவிகளுக்கு, பள்ளிப் பருவத்தில் இருந்தே புததகங்கள் மீதான ஆர் வத்தை தூண்டும் வகையில் நூலகங் களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் நூலகங் களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக் கிறது. இதற்காகத் தனியாக பள்ளிக்கல்வித்துறை யின்கீழ் துறையும் உருவாககப்பட்டு உள் ளது.

99.9 சதவீதம்

நூலகங்களை காலத்துக்கு ஏற்றாற் போல், நவீனமாக மாற்றும் முயற்சியில் இந்தியாவில் தமிழ்நாடே முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அதிலும் அரசு பள்ளிகளில் டிஜிட்டல் நூலகங் களை மாற்றி அமைத்து அதனை கையாளுவதில் தமிழ் நாடுதான் முதலிடத்தில் உள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய கல்விக்கான ஒருங்கி ணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.அய்.எஸ்.இ.பிளஸ்) வெளியிட்ட கடந்த 2023-2024-ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களில் இது பதிவாகி உள்ளது.

அதில் தமிழ்நாட்டில் உள்ள 58 ஆயிரத்து 722 பள்ளிகளில், 58 ஆயிரத்து 79 பள்ளி களில் டிஜிட்டல் நூலக வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அரசு பள்ளி களை பொறுத்தவரையில், 37 ஆயிரத்து 672 பள்ளி களில் 37 ஆயிரத்து 621 பள்ளிகளில் இந்த வசதி உள்ளது புள்ளி விவரங்களில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. அதாவது 99.9 சதவீதம் பள்ளிகளில் டிஜிட்டல் நூலக வசதி இருக்கிறது.

பல ஆண்டுகள் ஆகலாம்

இந்த பட்டியலில் மற்ற மாநிலங்களை பார்க் கும்போது, மிகவும் பின் தங்கி இருப்ப தையே பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டுக்கு அடுத்த படியாக கேரளாவில் 21 சதவீதம் டிஜிட்டல் நூலக வசதி பள்ளிகளில் செய் யப்பட்டு உள்ளது.

இந்த புள்ளி விவரங் களை வைத்துப் பார்க் கும்போது, தமிழ்நாடு அளவுக்கு டிஜிட்டல் நூலக வசதியை எட்டிப்பிடிக்க மற்ற மாநிலங்களுக்கு மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என கல்வியாளர்களும், நூலக பிரியர்களும் தெரி விக்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *