தமிழர் தலைவர் பங்கேற்று மலரை வெளியிட்டார்!
சென்னை, மார்ச் 6- பெரியார் பெருந்தொண்டர் “சுயமரியாதைச் சுடரொளி” மானமிகு வேல்.சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழா 1.3.2025 அன்று காலை 11 மணியளவில் சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவிற்கு சமாஜ்வாடி ஜனதா கட்சியின் மேனாள் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் வேல்.சோ.தளபதி தலைமை தாங்கி உரையாற்றினார்.
முன்னதாக இவ்விழாவை மிகுந்த சிறப்புடன் ஏற்பாடு செய்த பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
இவ்விழாவிற்கு “சுயமரியாதைச் சுடரொளி” வேல்.சோமசுந்தரம் – இரத்தினம்மாள் இணையரின் குடும்பத்தினர் டாக்டர் த.தாமரை, எஸ்.செல்வமணி, டி.கண்ணகி, டாக்டர் எம்.மணிமேகலை, டாக்டர் கே.மணிகண்டன், டாக்டர் நெ.விஜயலட்சுமி, வேல்.சோ.இராசராசன், வழக்குரைஞர் வேல்.சோ.அசோகன், வழக்குரைஞர் அ.மங்கை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரியர் பெருந்தொண்டர் “சுயமரியாதைச் சுடரொளி”
வேல்.சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று படத்தினைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி விழா மலரை வெளியிட வே.அண்ணாமலை பெற்றுக் கொண்டார். இதையடுத்து தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார்.
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
இந்நிகழ்வில் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், செய்யாறு மாவட்டக் கழகத் தலைவர் அ.இளங்கோவன், நகர கழகத் தலைவர் தி.காமராஜ், செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வி.வெங்கட்ராமன், மேனாள் மாவட்ட செயலாளர் சேத்துப்பட்டு அ.நாகராசன் ஆகியோர் நினைவுரையாற்றினர்.
டாக்டர் இரா.சந்திரிகா இணைப்புரை வழங்கினார். சென்னை பிரசாந்த் மருத்துவ மனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நெ.பரத்குரு அவர்கள் இவ்விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்து அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினார். விழா சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது. அனைவருக்கும் விழா மலர் மற்றும் தந்தை பெரியாரின் நூல்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், வேலூர் மாவட்ட கழக காப்பாளர் சடகோபன், நெல்லுப்பட்டு இராமலிங்கம், முனைவர் மு.தமிழ்மொழி மற்றும் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன் தலைமையில் தனி வேனில் தோழர்கள் திரளாக வந்து விழாவை சிறப்பித்தனர். தமிழ்நாடு முழுவதுமிருந்து திராவிடர் கழகப் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக வந்து பங்கேற்று சிறப்பித்தனர்.
சுயமரியாதைச் சுடரொளி வேல்.சோமசுந்தரம் – இரத்தினம்மாள் குடும்பச் செல்வங்கள்: எஸ்.சிவக்குமார், எஸ்.ரேவதி, எஸ்.ஆனந்த்குமார், எ.பாக்யலட்சுமி, டி.ஆனந்த், டி.பாலபரணீயன், பீ.தமிழரசி, எம்.சங்கீதா, வி.சதீஷ், டாக்டர் கே.பாரதி, டாக்டர் இரா.திவ்யா, டாக்டர் எம்.சிவசங்கரன், டாக்டர் ஆர்.காவ்யா, டாக்டர் எஸ்.அன்பரசன், டாக்டர் அ.உதயன், டாக்டர் வி.மோனிகா மற்றும் விஜய் முருகன், சஞ்சய், ஸ்கந்தன், மாறன், தீரன், நிலா, இன்பா, ஜெயந்த், விஸ்வநாத், கவின் மஹாதேவ், ஆதித்யா, ரன்விகா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.