புதுடில்லி, மார்ச் 6 இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் பெரும் பணக்காரர்கள் 191 பேராக உயர்ந்துள்ளனர் என்று நைட் ஃபிராங்க் அமைப்பு புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
உலகளாவிய பெரும் பணக் காரர்கள், சொத்து விவரங்களை வெளியிடும் நைட் ஃபிராங்க் அமைப்பு அண்மையில், 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து அறிக்கையை வெளியிட்டது. இதில் இந்தியாவில் 191 பேர் 100 கோடிக்கும் அதிகமாக சொத்துகளை வைத்துள்ளனர் என்றும், 2024-இல் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை 6 சதவீதம் அள வுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக நைட் ஃபிராங்க் அமைப்பு வெளியிட் டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட் டுள்ளதாவது: இந்தியாவில் அதிக சொத்து மதிப்புள்ள நபர்கள் (எச்என்டபிள்யூஅய்) அதிகரித் துள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் 1 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.87 கோடி) சொத்து மதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 80,686 ஆக இருந்தது. இது 2024-ல் 85,698-ஆக அதிகரித்துள்ளது.
இது 6 சதவீத உயர்வு ஆகும். மேலும், இந்தியாவில் 191 பேர் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வைத்துள்ள பெரும் பணக்காரர்களாக உள்ளனர். வரும் 2028-ஆம் ஆண்டுக் குள் 93,753 பேர் சுமார் ரூ.87 கோடி சொத்து மதிப்புள்ளவர்களாக இருப்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.