சென்னை, மார்ச் 6- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், நேற்று (5.3.2025) நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் 58 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்ற பெயரில் வடமாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகை அடிப்படையில் அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில்மக்கள் தொகையைக் காட்டி தொகுதிகளைக் குறைத்திட வஞ்சகத்தோடு நிறைவேற்றத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடித்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களின் அழைப்பினை ஏற்று நேற்று (5.3.2025) காலை தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற கூட்டத்தில் 58 கட்சிகளின் தலை வர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பங்கேற்றோர் விவரம்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோர் விவரம் வருமாறு:–
திராவிட முன்னேற்றக் கழகம்சார்பில் ஆர்.எஸ்.பாரதி, பி.வில்சன்எம்.பி., திராவிடர் கழகம் சார்பில் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி சார்பில் பேரா. கே.எம்.காதர்மொகிதீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் -ஈ.ஆர்.ஈஸ்வரன், பா.ம.க. சார்பில் -மரு.அன்புமணி, தமிழக வெற்றிக் கழகம்- சார்பில் என்.ஆனந்தன், அனைத்திந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்- சார்பில் வி.டி.பாண்டியன், சமதா கட்சி- மணிவண்ணன், புரட்சி பாரதம் கட்சி சார்பில் எம்.ஜெகன்மூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கு.செல்வப் பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரா.முத்தரசன், என். பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் பெ.சண்முகம்,சச்சிதானந்தம் எம்.பி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வைகோ எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ரவிக்குமார் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பில் தி.வேல்முருகன், மக்கள்நீதி மய்யம் சார்பில் கமலஹாசன்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஜெயக்குமார், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வி.இளங்கோவன், பார்த்தசாரதி, எஸ்.டி.பி.அய்.கட்சி சார்பில் பி.எம்.எஸ்.முகமதுமுபாரக், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் ஜி.செந்தமிழன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பி.ஜான்பாண்டியன், இந்திய மக்கள்கல்வி முன்னேற்றக் கழகம் சார்பில் மூன்றெழுத்து (எ) அருள்ராமன், சீனிவாசன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் டி.ஆர்.பாரிவேந்தர்,விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சி சார்பில் பொன்.குமார், மனிதநேய ஜனநாயககட்சி சார்பில் தமிமுன் அன்சாரி, பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் என்.ஆர்.தனபாலன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்பன்னீர்செல்வம், இந்திய குடியரசு கட்சி சார்பில் சே.கு.தமிழரசன், ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்.அதியமான், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கருணாஸ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில்கே.எம்.செரீப், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (விடுதலை) சார்பில் ஆசைதம்பி,கொங்கு இளைஞர் பேரவை சார்பில்தனியரசு, தமிழ் புலிகள் கட்சி சார்பில்நாகைதிருவள்ளுவன், பசும்பொன் தேசிய கழகம் சார்பில் ஜோதி முத்து ராமலிங்கம், மக்கள் விடுதலைக் கட்சி சார்பில் எஸ்.கே.முருகவேல், ராஜன், அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சி ஜி.பி.கதிரவன், இந்திய தேசிய கட்சி சார்பில் அற்புதராஜ், பஷீர் அகமது, வன்னியர் கூட்டமைப்பு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி சார்பில் சி.என்.ராமமூர்த்தி, சமத்துவ மக்கள் கழகம்சார்பில் எர்ணாவூர் நாராயணன்,ஆதித்தமிழர் கட்சி சார்பில் கூ. ஜக்கை யன், ஆம் ஆத்மிகட்சி சார்பில் வசீகரன், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் க.சக்திவேல், அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் டாக்டர் வி.எஸ்.அய்சக் அய்யா, தமிழ்நாடு இளைஞர் கட்சி காமேஸ்வரன், மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் சேனாதிபதி, முனைவர் ஆ.சா.செல்வராஜ், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் எம்.எஸ்.ரவி, தமிழர் தேசிய முன்னணி சார்பில் கணேசன், தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் எம்.முகமது இலியாஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் டாக்டர் ராஜா என்கிற பக்ருதீன் அலி அகமது, தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சிசார்பில் கே.அ.சுரேஷ் பாபு, அண்ணாஎம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம் சார்பில் டாக்டர் முத்துராமன், சிங்கப்பெருமாள், கலப்பை மக்கள்இயக்கம் சார்பில் பி.டி.செல்வகுமார், டாக்டர் எம்.ஜி.ஆர். குடியரசு கட்சி சார்பில் ஜே.ஹரிபிரசாத், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் சிறீதர் வாண்டையார் உள்பட 58கட்சியினர் பங்கேற்றனர்.