கரூர், மார்ச் 5- கரூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 02.03.2025 அன்று மாலை 5 மணி அளவில் வேலாயுதம் பாளையம் பெரியார் பதிப்பகத்தில் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் ம.காளிமுத்து வரவேற்புரை ஆற்றினார்.
கரூர் மாவட்ட தலைவர் ப.குமாரசாமி தலைமையேற்று மாவட்டத்தில் நடைபெற வேண்டிய கழகப் பணிகள் குறித்து விரிவாக பேசினார்.
மாவட்ட காப்பாளர் ராசு, பொதுக்குழு உறுப்பினர் வைரம், மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சிறப்பு ரையாற்றினார். அவர் தனது உரையில் சிதம்பரம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு செயல்வடிவம் தருவது கழக அமைப்புகளை கோபி மாவட்டம் முழுவதும் பரவலாக உருவாக்குவதற்கு பிரச்சாரக் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது கழகத் தோழர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பது, தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் திராவிடர் கழகம் உணர்வோடும் உயிர்ப்போடும் இயங்குவதற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராத உழைப்புகளையும் பற்றியும் கழகத் தோழர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜெகநாதன்,கரூர் நகர செயலாளர் சதாசிவம், இளைஞரணி ராஜா, கரூர் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி,சரவணன்,வீரமணி, பெருமாள் மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் இராமசாமி, தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்,
கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் இறுதியாக சிறப்புரை யாற்றினார். மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் மோகன் நன்றியுரை ஆற்றினார்.
தீர்மானங்கள்
க.பரமத்தி ஒன்றிய தலைவர் த.தமிழ்செல்வன், கரூர் நகர செயலாளர் சதாசிவம் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது
15.2.2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என்றும்,
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு கரூர் மாவட்டத்தில் முடிவடைந்த சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது என்றும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி உயர பெரியார் சிலை உடன் அமை யுள்ள பெரியார் உலகத்திற்கு கரூர் மாவட்டத்தில் சார்பில் பெருமளவில் நிதி வசூல் செய்து வழங்குவது என்றும்,
கரூர் கழக மாவட்டத்தில் கிராமம் முதல் பேரூராட்சி ,நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழகப் பிரச்சார கூட்டங்களை மார்ச்,ஏப்ரல்,மே மாதங்களில் நடத்துவது,புதிய கிளைக் கழகங்களை உருவாக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய பொறுப்பாளர்கள்
மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.மோகன், மாவட்ட தொழி லாளர் அணி செயலாளர் மு.வடிவேல், நகரத்தலைவர்: ம.சதாசிவம், நகர செயலாளர். ச.ராசா, நகர துணை தலைவர் குமார், நகர துணை செயலா ளர் நைல் சபாபதி, நகர இளைஞர் அணி தலைவர் கா.கிராமம் ரமேஷ்
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் தொழிலாளர் அணி தலைவர் மோகன் நன்றி உரையாற்றினார்.