நாகர்கோவில்,மார்ச்4- தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மற்றும் குமரிமாவட்ட நிர்வாகமும் இணைந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி வளாகத்தில் தொடங்கிய புத்தக திருவிழாவில் நமது புத்தக நிலையம் கடை எண் 81 இல் செயல்பட்டது.
தந்தை பெரியாருடைய நூல்களை பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வந்து வாங்கிச் சென்றனர். புத்தக திருவிழா நிறைவு விழாவில் குமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், காப்பாளர் ம.தயாளன், துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், ஓட்டுநர் இராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
புத்தக நிலைய ஊழி யர் அருண் குமார் விற் பனையை கவனித்தார். ரூ.77000க்கு இயக்க நூல்கள் விறுவிறுப்பாக விற்பனையாகின. புத்தக நிலைய விற்பனையை சிறப்பாக கவனித்த தோழர்களுக்கு மாவட்டத் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தார்