சென்னை,மார்ச் 4- 5 மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைக்க ₹122 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனை, செங்கோட்டை அரசு மருத்துவமனை ஆகிய 5 அரசு மருத்துவமனைகளில் தலா 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தபடவுள்ளது.
கும்பகோணம், தென்காசி, காங்கேயம் ஆகிய 3 அரசு மருத்துவ மனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப் படவுள்ளது.