நியூஸ் பேப்பர் அச்சு மையில் காரீயம் உள்ளது. இதனால், அதில் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்கள் வைத்து சாப்பிட்டால், நமது உடலுக்குள் காரீயம் சென்று தீங்கு ஏற்படுத்தும். இந்நிலையில், சிவகங்கையில் நியூஸ் பேப்பரில் வடை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.1,000 அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத் துறையினர், மீண்டும் இதுபோன்று விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு உதவி எண்
நாளை மார்ச் 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், தங்களது புகார்கள், சந்தேகங்களை 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். 7518 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்
வந்தே பாரத் ரயிலிலும்
தமிழ் புறக்கணிப்பு
தமிழ்நாட்டிற்குள் ஓடும் வந்தே பாரத் ரயிலிலும், தமிழ் புறக்கணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை-நெல்லை இடையே செல்லும் வந்தே பாரத் ரயிலில் ஒரு இடத்தில் கூட தமிழ் இல்லை. முழுவதும் ஹிந்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
IR என்பதையும் (Indian Railway) ஹிந்தியில் பா.ஆர். (பாரத் ரயில்வே) என எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் இந்த ரயில் சென்னை அய்.சி.எப்.பில் (ICF) தயாரிக்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.