டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தொகுதி வரையறை மற்றும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுங்கள், திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மாணவர்கள் விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அய்தராபாத்தில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு..
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அசாம் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி: எடுத்துக்காட்டாக, “ஒரு மருத்துவமனை ஹிந்துக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறது. மற்ற மதங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்கான செலவை தாங்களாகவே ஏற்க வேண்டும். இந்தியா போன்ற ஒரு நாட்டில் அரசாங்கம் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? உங்கள் கருத்தை தெரிவிக்கவும்” என கேட்கப்பட்டது. மதப்பிரிவினையை ஊக்குவிப்பதாக இதற்கு சமூக ஊடக பயனர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு.
* தேசிய பட்டியல் ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக சாடினார். இதுதான் பாஜகவின் தலித் எதிர்ப்பு மனநிலை என கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தென் மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை குறைத்து, “பிமாரு மாநிலங்கள்” இடங்களை அதிகரிப்பதன் மூலம் “நிரந்தர” அதிகாரத்தைப் பெறுவதற்கான வழிமுறையாக தொகுதி வரையறை நிர்ணயத்தை பாஜக பயன்படுத்துவதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் குற்றச்சாட்டு.
* அய்அய்டி மற்றும் அய்அய்எம்-களில் தற்கொலை சம்பவங்கள் “மிகவும் கெட்ட வாய்ப்பானது; இந்த சூழ்நிலையை தடுக்க ஒரு வலுவான வழிமுறையை நாங்கள் உருவாக்குவோம். இந்தப் பிரச்சினையை தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு செல்வோம்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு.
தி டெலிகிராப்:
* பீகார் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2023-2024 ஆம் ஆண்டில் 14.5 சதவீதமாக குறைந்தது: முக்கியத் துறைகளில் ஏற்பட்ட சரிவை கணக் கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது, பீகார் பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் சுதன்ஷு குமார், அறிக்கை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடு கடத்தப் படுதல் குறித்து பிப்ரவரி 6 அன்று அவையில் தவறான தகவலை தந்ததற்காக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எதிராக சிறப்புரிமை கேள்வி தாக்கீதை திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை சாகரிகா கோஷ் அனுப்பியுள்ளார்.
* ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை நடைமுறைப்படுத் தவே ஆளுநர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தாக்கு.
– குடந்தை கருணா