நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு அநீதிக்கு எதிராக தென் மாநிலங்கள் இணைந்து போராடும்

Viduthalai
1 Min Read

கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கடும் எச்சரிக்கை

பெங்களூரு, பிப். 28 தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அமித்ஷா அளித்துள்ள வாக் குறுதி நம்பகத்தன்மையற்றது என்று கருநாடக முதலமைச்சர் சித்த ராமையா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உறுதிமொழி நம்பகத்தன்மையற்றது, தவறாக வழிநடத்தக் கூடியது. துல்லியமான தகவல் இல்லாததன் காரணமாக அவர் இவ்வாறு பேசி யிருக்கலாம். அல்லது கருநா டகா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களை குறைத்து மதிப்பிடும் திட்டமிட்ட முயற்சி யாக இருக்கலாம். பா.ஜ.க.வின் ஆதிக்கத்தை எதிர்ப் பதால், தென்னிந்திய மாநிலங் களின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்த ஒன்றிய அரசு எல்லை நிர்ணயத்தை ஒரு கருவி யாகப் பயன்படுத்த விரும்புகிறது.

போராட்டம்

முந்தைய எல்லை நிர்ணயப் பணிகள், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நியாயம் அளிப்பதாகவும், தென் மாநிலங் களின் வளர்ச்சி முயற்சிகளை அங்கீகரிப்பதாகவும் இருந்தது. தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற்கொள்ளக் கூடாது. தற்போது உள்ள அளவை அப்படியே தொடர வேண்டும். கருநாடக பா.ஜ.க. தலைவர்கள் தெரு சண்டைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அனைத்து கன்னடர்களும், ஜாதி, மதம், கட்சி வேறுபாடுகளை மறந்து, ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.
அநீதிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தென் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் நாட் களில், அநீதியை எதிர் கொள்ளும் அனைத்து மாநிலங் களுடனும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தப்படும்” என்று அதில் சித்தராமையா கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *