முகத்தில் பிறந்தவர்கள்
அல்லர் நாங்கள்!
முறையாகப் பிறந்த
முழு மனிதர்கள்!
மூழ்கிக் கிடந்த நாட்டின்
முகவரியை
மாற்றப் பிறந்த
மானமிகு போராளிகள்!
இகழ்வாகப் பேசியவர்கள்
இடுப்பு எலும்பை
கழற்றப் பிறந்த
கருஞ்சட்டை வீரர்கள்!
‘சூத்திரர்கள்
ஆள முடியாதா?‘
சூழ்ச்சிகள் – இனிப்
பலிக்காது!
மானமிகு ஸ்டாலின்
ஆட்சியைப்
பார்த்த பிறகும்
சொல்ல வருமோ
துணிவு?
அவர் பணிவைக்
கண்டு
எடைக் குறைச்சல்
போட வேண்டாம் –
ஏமாந்து போவீர்கள்!
மு.க.ஸ்டாலின்
வெறும் பெயரல்ல!
திராவிட சித்தாந்த
செயலின் வடிவம்!
‘செயற்கரிய
செய்வார்
பெரியார்’ என்ற
சிங்கத்தின் பேரன்
ஜாக்கிரதை!
– கவிஞர் கலி.பூங்குன்றன்