நேற்று (27.2.2025) பழனியில் தமிழர் தலைவர் மேடையில் இருக்க அருகில் உள்ள கிராமத்து பள்ளியிலிருந்து மூன்று மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் தந்தை பெரியாரின் சிந்தனைகளை மிக நேர்த்தியாகப் பேசினார்கள்.
மாணவர்களுக்கு ஆசிரியர் பொன்னாடையும், புத்தகமும் வழங்கி வாழ்த்தினார்கள்!
மாணவர்கள் மேடையில் இருந்து கீழே இறங்கி இருக்கையில் அமர்ந்த போது, திரளாகக் கூடி இருந்த மக்கள் கூட்டத்திலிருந்து திடீரென ஒரு முருக பக்தர், “பெரியார் கருத்துகளை நன்றாகப் பேசினீர்கள்” என்று மாணவர்களை கைகுலுக்கி பாராட்டினார்.
இது பெரியார் உயிர் கலந்த மண்!!