வல்லம், பெரியார் பாலிடெக்னிக்கில் 25.02.2025 அன்று சென்னை அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres Pvt. Ltd.,Chennai) கம்பெனி கலந்து கொண்ட வளாக நேர்காணலில் 56 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் தேவராஜன் வளாக நேர்காணலில் கலந்து கொண்டு மாணவர்களை தேர்ந்தெடுத்தார். பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வில் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.