பெரம்பலூர், பிப். 25- இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு பிரிவின் 2025 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 22.02.2025 அன்று நடைபெற்றது.
இதில் திருச்சி பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராக சிறப் பாக செயல்பட்டு பல இளம் மருந்தாளுநர்களை உருவாக்கி வருவதனை பாராட்டி தமது கல்விப் பணிக்காக இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த மருந்தியல் ஆசிரியர் விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது.
தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஏ.சீனிவாசன் தலைமையில் இந்திய குடும்ப நல அமைச் சகத்தின் நலவாழ்வு மற்றும் ஆராய்ச்சித் துறையின் முது நிலை துணை இயக்குநர் Dr. வி.பி. சிங், முனைவர் இரா. செந்தாமரைக்கு விருதிற்கான வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சி இந்திய மருந்தியல் கல்லூரிகள் கூட்மைப்பின் தலைவர் பேராசிரியர் கே. சின்னசாமி, இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் முனைவர் வீ. சங்கர், துணைத் தலைவர் முனைவர் சி. கந்தசாமி, செயலாளர் முனைவர் ஆர். சம்பத் குமார் மற்றும் செயலாக்க உறுப்பினர் முனைவர் எஸ். முகமது ஹாலித் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக தமிழ்நாட்டி லுள்ள மருந்தியல் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களி லிருந்து சுமார் 3000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வினாடி-வினா, ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்தல் போட்டிகள் காலை முதலே தொடர்ந்து நடைபெற்றது. 415 ஆய்வுக் கட்டுரைகளில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் 30 மாணவர்கள் பங்கு கொண்டு 18 பேர் தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் 5 மாணவர்கள் மூன்று முதல் பரிசினையும், இரண்டு மூன்றாம் பரிசினையும் தட்டிச் சென்றனர். மேலும் மருந்தியல் துறையில் சாதனை படைத்த ஆறு பேராசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
விருது பெற்றவர்களின் கருத்துப் பகிர்வில் முனைவர் இரா செந்தாமரை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் தலைமையில் நடை பெறும் பெரியார் கல்வி நிறுவனத்திலிருந்து மகளிர் ஆசிரி யருக்கான விருது பெற்றதில் பெருமிதம் என்று பதிவு
செய்தமை குறிப்பிடத்தக்கது.