மின்சாரம்
சைவர்கள் மகாசிவராத்திரி கொண்டாடினால், வைணவர்கள் வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடுவார்கள்.
இந்த இரண்டு அமைப்பினரும் முதன்மைப் படுத்தும் கடவுளர்களின் கதைகளோ புராணங்கள் படி ஆபாச – கழிசடைத்தனம் வழியும் இந்து மகாக்கடல் என்றுதான் சொல்லவேண்டும்.
சிவராத்திரியன்று பட்டினிக் கிடந்தால் எல்லாப் பாவங்களும் நீக்கப்பட்டு சிவலோக பதவி அடைந்து விடுவார்களாம்.
அதேபோல, வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்தால் உடனே அவர்களுக்கு சொர்க்கவாசல் திறந்துவிடும் – அக்கோவில்களில் சொர்க்கவாசல் நுழைவதற்கென்றே தனித்த ஏற்பாடுகளும் உண்டு.
இதில் வேடிக்கை என்னவென்றால், அப்படி சொர்க்க வாசலில் நுழைந்தவர்கள் திரும்பி அவரவர் கள் வீட்டுக்குத்தான் வருகிறார்கள். எல்லாம் பிள்ளை விளையாட்டே!
இதோ ஒரு எடுத்துக்காட்டு:
ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும், ஒழுக்கக் கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோவில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்குச் சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பல காரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், மங்கலான வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோவிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன், பார்ப்பன இளைஞன் பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு, ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.
ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி விரத பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைப் பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈஸ்வரலிங்க சிலைக்கு தீப ஆராதனை செய்தது போலவும், பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால், பார்ப்பனப் பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம்.
இதுபோலஇன்னும்பலசமாச்சாரங்கள்உண்டே! இவற்றில் கடுகத்தனை அளவுக்காவது அறிவுக்குப் பொருத்தமான அம்சமோ, ஒழுக்கத்தை வளர்த்தெடுக் கும் தன்மையோ உண்டா?
எதேச்சையாக சிவராத்திரியன்று எது நடந்தால் கூடப் போதும், சம்பந்தப்பட்டவன் சிவலோக பதவி அடைகிறான் என்றால், இது ஒருவகையான மலிவான, மதத்துக்கு ஆள் சேர்க்கும் ஏற்பாடு அல்லாமல் வேறு என்ன?
தாயத்து விற்கும் வியாபாரி ஒருவன் சகல நோய்க் கும் இதோ ஒரு கண்கண்ட மருந்து என்று சொல்லி பாமர மக்களின் பையில் உள்ள பணத்தைக் கறப்பது மாதிரியான ஏமாற்று மோசடி வேலையல்லாமல் வேறு என்னவாம்!
தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப் பானுக்குக் கூட மோட்சம் அளித்ததாகக் கூறுவதுதானே திருவிளையாடல் புராணம்!
சிவராத்திரி என்று கூறி, சிவனுக்காக பட்டினி விரதம் இருக்கிறார்களே – அந்த மூலக்கடவுளாவது ஒழுக்கம் உள்ளவனா?
தாருகாவனத்தில் இருந்த ரிஷிப் பத்தினிகளை சிவன் பாலியல் வன்கொடுமை செய்தான் என்றும், கோபமடைந்த ரிஷிகள் சிவன்மீது சாபம் விட்டதாகவும், அதன் காரணமாக சிவனின் சிசுனம் (ஆண் குறி) அறுந்து விழுந்ததாகவும், கீழே விழுவதை அறிந்த அவனது மனைவி பார்வதி தேவியார் தன் குறியால் தாங்கிப் பிடித்ததாகவும், அதன் அடையாளம்தான் சிவன் கோவில்களில் வைத்து வணங்கப்படும் சிவலிங்க வடிவம் என்று வெட்கமில்லாமல், அருவருப்பு இல்லாமல் புராணம் எழுதி, அதனை நிலைக்க வைக்கக் கோவில் எழுப்பி, கருவறையில் இந்தக் கேவலமான உருவத்தை வடித்து வைத்து, ‘பக்தர்களே, விழுந்து விழுந்து கும்பிடுங்கள்!’ என்கிறார்கள் என்றால், இதைவிட மானக்கேடு உண்டா?
இப்படிப்பட்ட கடவுளுக்கு 112 அடியில் சிலை வைத்ததும், அதனைத் திறந்து வைக்க இந்தியாவின் பிரதமரும், மூன்று மாநில முதலமைச்சர்களும், ஒன்றிய அமைச்சர்களும் ஓடோடி வந்ததும் அவமானப்பட வேண்டிய, தலைகுனிய வேண்டிய ஒன்றல்லவா!
இதனைப்பற்றி இந்தக் கண்ணோட்டத்தில் எழுத ‘விடுதலை’யைத் தவிர வேறு நாதி உண்டா?
திராவிடர் கழகத்தைத் தவிர வேறு அமைப்பு தான் உண்டா? வினா எழுப்புவதற்குத் திராவிடர் கழகத் தலைவரைத் தவிர வேறு யார்தான் உள்ளனர்?
ஹிந்து மதம் என்றாலே இதுதான்என்பதற்கு அத்தாட்சிதான் இந்த சிவராத்திரி பண்டி கையும், அதன் தாத்பரியங்களும்.
நாகரிகம் வளர்ந்த ஒரு சமுதாயத்தில்தான், கால கட்டத்தில்தான் நாம் வாழ்கிறோமா?
சிந்திப்பீர் பக்தர்களே!