தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்த மும்மொழிக் கொள்கை – ஹிந்தி திணிப்புக்கு எதிராக தாராபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிறுவன் தந்தையோடு கலந்து கொண்டு – ஆர்வத்தோடு நடப்பதை உள்வாங்கிக் கொண்டிருந்தான்! முழக்கங்கள் எழுப்பினான்! அவன் முகத்தில் ஒரு சிறு சோர்வு!
இரண்டு மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அவன் தந்தையாரிடம் கேட்டபோது காலை உணவு அருந்தாமல் பாலையும் தண்ணீரையும் மட்டும் குடித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஆர்வத்தோடு பங்கெடுக்க வந்தான் என்ற வார்த்தைகள் மொழிப் போராட்ட உணர்வு மரபு வழியாக இப்படித்தான் குருதியில் கலந்து விடுகிறதோ என ஆச்சரியப்பட வைத்தது!! – பெரியார் குயில், தாராபுரம்