தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மற்றும் குமரிமாவட்ட நிர்வாகமும் இணைந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி வளாகத்தில் தொடங்கிய புத்தக திருவிழாவில் பெரியார் சுயமரியாதை புத்தக நிலையம் கடை எண் 81 இல் செயல்பட்டு வருகின்றது. தந்தை பெரியாருடைய நூல்களை பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் திராவிடர்கழக குமரிமாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், கழக மாவட்டத் துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மாவட்ட கழக துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர் ஆகியோர் பங்கேற்றனர். புத்தக நிலைய ஊழியர் அருண் குமார் விற்பனையை கவனித்து வருகின்றார் 1.3.2025 வரை புத்தக நிலையம் செயல்படும்.
நாகர்கோவில் புத்தக திருவிழாவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன நூல்கள் சிறப்பான விற்பனை

Leave a Comment