25.2.2025 அன்று கோவை வருகை தரவிருக்கும் – மாநில உரிமைகளைப் பறிக்கும் – அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மை, சமூக நீதிக்கு எதிராகச் செயல்படும் – மாநில அரசுக்கு அளிக்க வேண்டிய உரிமைத் தொகைகளைத் தரமறுக்கும் – தேசிய கல்வி என்ற பெயராலே ஹிந்தியைத் திணிக்கும் ஒன்றிய பிஜேபி அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு – தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புணர்வையும், உரிமைக் குரலையும் வெளிப்படுத்தும் வண்ணம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய கூட்டமைப்புகள், இடது சாரிகள் உள்ளிட்ட 21 அமைப்புகள் இந்தக் கருப்புக் கொடி அறவழி ஆர்ப்பாட்டத்தில் பங்கு ஏற்கிறார்கள்.
கோவை, மேட்டுப்பாளையம், கோபிச்செட்டிபாளையம், திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி கழக மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள் பெரும் அளவில் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சென்னை
19.2.2025
கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் உத்தரவுப்படி)