மன்னர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் கனகசபைமீது ஏறி வழிபட பொது தீட்சிதர்கள் எதிர்ப்பின் காரணத்தால் நீதிமன்றம் சென்று தற்பொழுது வழிபட்டு வரும் நிலையில் பக்தர்கள் போராடிதான் வழிபட்டு வருகின்றனர்.
தில்லை கோவிந்தராஜர் பெருமாளுக்கு பல நூற்றாண்டு காலமாக சைவ, வைணவ பாகுபாட்டால் பிரம்மோற்சவம் நடத்த பொது தீட்சிதர்கள் எதிர்ப்பது ஏன்? இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள பெருமாள் கோவிலில் கொடி மரத்தைக்கூட மாற்ற தீட்சிதர்கள் எதிர்க்கின்றனர்.
போராடிய சிறீராமனுஜர் நாடு கடத்தப்பட்டார். தற்பொழுது பிரமோற்சவம் நடத்த தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி எம்.என். ராதாவுக்கு பொது தீட்சிதர்கள் பல்வேறு இடையூறு செய்து அவரது உயிருக்கே அச்சுறுத்தல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றத்தில் வேண்டும் என்றே மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பா.ஜ.க. இந்து முன்னணியினர் பொய்யான நடைபெறாத ஒன்றைக் கூறி மதக் கலவரத்தை தூண்டப் பார்க்கின்றனர். திருப்பரங்குன்றம் முருகன், சிக்கந்தர் தர்க்கா, சமண குகைகளில் நடைபெற்று வரும் பாரம்பரியமாக தொன்றுதொட்டு நடைபெற்று வரும் வழிபாட்டு முறைகள் தொடர வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சி நடத்திவரும் நம் முதல்வருக்கு உதவ வேண்டி தங்களை இரு கரம் கூப்பி வணங்குகின்றேன்.
ஜெமினி எம்.என். ராதா (எ) ராதாகிருஷ்ணன்
நிறுவன தலைவர்,
தெய்வீக பக்தர்கள் பேரவை, சிதம்பரம்
சிதம்பரம் கோயிலில் என்ன நடக்கிறது?
Leave a Comment