புதுடில்லி, ஜூலை 13– அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா வுக்கு வழங்கப்பட்ட பணி நீட் டிப்பை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
ஒன்றிய அமலாக்கத்துறை இயக்கு நராக எஸ்.கே.மிஸ்ரா கடந்த 2018ஆ-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு கால பதவிக்காலம் 2020ஆ-ம் ஆண்டு நிறைவுற்ற நிலையில், மேலும் 3 ஆண்டு கள் அவருக்கு பணி நீட்டிப்பு வழங் கப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ஜெயா தாகுர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித் தது.
மனுக்களை பரிசீலித்த உச்சநீதி மன்றம், ‘இயக்குநராக நியமிக்க அமலாக்கத் துறையில் வேறு ஆட் களே இல்லையா?, எஸ்.கே.மிஸ்ரா தவிர்க்க முடியாத நபரா?’ என கேள்வி எழுப்பியது. இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, எஸ்.கே. மிஸ்ரா ஆகி யோர், ‘பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பின் இந்தியா குறித்த ஆய்வுக் கூட்டம் 10 ஆண்டு களுக்கு ஒரு முறை நடைபெற உள் ளதால், அமைப்புடன் தொடர்ந்து செயலாற்றி வரும் நபர் தவிர்க்க முடியாதவர். அரசியல் உள்நோக் கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என ஒன்றிய அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
அமலாக்கத் துறை இயக்குநரின் பதவியை ஓராண்டுக்கு ஒருமுறை நீட்டிப்பது அதன் சுதந்திரத்தை பாதிக்கச் செய்யும், மீண்டும் நீட் டிப்பு கிடைக்க சமரசங்களை செய்ய வேண்டியிருக்கும் என மனுதாரர் சார்பில் வாதிட்டப் பட்டது. அமலாக்கத் துறை இயக் குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதும், ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணைய திருத்தச் சட்டமும் சட்டவிரோத மானது என நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட அப்போதைய மூத்த வழக்குரைஞர் கே.வி.விஸ்வ நாதன் தெரிவித்தார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே 8ஆம் தேதி ஒத்திவைத்தது. இதற் கிடையே இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்றுமுன்தினம் (11.7.2023) தீர்ப்பு கூறினர். அந்த தீர்ப்பில், ‘அமலாக் கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ் ராவுக்கு 3-ஆவது முறை பணி நீட் டிப்பு வழங்கியது சட்டத்துக்கு புறம்பானது, எனவே பணி நீட் டிப்பு உத்தரவு ரத்து செய்யப் படுகிறது. இருப்பினும் அவர் ஜூலை (இம்மாதம்) இறுதிவரை பணியில் தொடர்வார். சி.பி.அய்., அமலாக்கத்துறை இயக்குநர்க ளுக்கு 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்க வகை செய்யும் பதவி நீட் டிப்பு வழங்கும், டில்லி சிறப்பு காவல்துறை நிறுவன திருத்த சட் டம், ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணைய திருத்த சட்டம் செல்லும்’ என்று கூறப்பட்டது.