வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை சரிபார்க்கக் கோரிய மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு விசாரணை

2 Min Read

புதுடில்லி,பிப்.19- வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை சரிபாா்ப்பதற்கு பிரத்யேக கொள்கை வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு விசாரிக்கவுள்ளது.

மனு

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா மாநில பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் பல்வல் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மேனாள் அமைச்சா் கரண் சிங் தலால் மற்றும் ஃபரீதாபாத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான லக்கன் குமாா் சிங்ளா ஆகிய இருவரும் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனா். இவா்கள் இருவரும் தோ்தலில் தோல்வியடைந்தனா். ஆனால் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் இரண்டாவது இடத்தை பிடித்தனா்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவா்கள் தாக்கல் செய்த மனுவில், ‘தற்போது உள்ள தோ்தல் ஆணைய நடைமுறையின்படி இவிஎம்களை அடிப் படையான சோதனைக்கு உட்படுத்துவது மற்றும் மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதை மட்டுமே உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆனால் இவிஎம் தயாரிக்கப்படவுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ய முறையான கொள்கைகள் இல்லை. இவிஎம்களை தயாரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் காா்பரேஷன் ஆஃப் இந்தியாவைச் (இசிஅய்எல்) சோ்ந்த பொறியாளா்கள், விவிபேடில் பதிவுகளை எண்ணும் பணியில் மட்டுமே ஈடுபடுத்தப் பட்டுள்ளனா்.

எனவே, இவிஎம்களில் உள்ள கட்டுப்பாடு அலகு, வாக்குச்சீட்டு அலகு, விவிபேட் மற்றும் சின்னங்கள் அலகு ஆகிய நான்கு பாகங்களை சரிபாா்ப்பதற்கு பிரத்யேக கொள்கை வடிவமைக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் ’ என குறிப்பிடப்பட்டது.
மேலும், தாங்கள் அரியானா பேரவைத் தோ்தல் முடிவுகளுக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்யவில்லை எனவும் அவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து, இந்த மனுவை உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் தீபாங்கா் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு 14.2.2025 அன்று விசாரித்தது.

அப்போது இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு விசாரிக்கும் என நீதிபதிகள் கூறினா்.
அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு கடந்தாண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 48 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *