அரசியல் கட்சிகளின் இலவசங்களுக்கு எதிரான மனுவை விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி,பிப்.19- தோ்தல்களுக்கு முன்னதாக அரசியல் கட்சிகளின் இலவசங்கள் மற்றும் பணம் சாா்ந்த திட்டங்களுக்கு எதிராக தாக்கலான மனுவை விசாரிக்க டில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இதேபோன்ற பிரச்சினையை விசாரித்து வருவதையும் சுட்டிக்காட்டி உயா்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
ஓய்வுபெற்ற நீதிபதி தாக்கல் செய்த இந்த மனு தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய், நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

இலவசம்

அப்போது, வாக்காளா்களுக்கு இலவசங்களை விநியோகிப்பது, இது ஊழல் நடைமுறைகளுக்குச் சமமானதாக இருக்குமா ஆகிய இரண்டு அம்சங்கள் குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரரை நீதிபதிகள் அமா்வு கேட்டுக் கொண்டது.
இதுகுறித்து நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் இலவசங்கள் மற்றும் அது ஊழல் நடைமுறையா என்பது தொடா்பான இரண்டு அம்சங்கள் உள்ளன. இந்த வழக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அந்த விவகாரத்துடன் இதையும் சோ்க்குமாறுகோரலாம். நீதிமன்றத்திற்கும் உதவலாம். ஒரே பிரச்சினையில் இரண்டு இணையான வழக்குகள் இருக்க முடியாது.
அடிப்படையில் இந்த பொதுநல மனுவின் பொருள் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் கவனத்தை ஈா்த்து வருகிறது. அதன்படி, இந்த மனுவை இந்த கட்டத்தில் நாங்கள் ஏற்க விரும்பவில்லை. இருப்பினும், மனுதாரா் ஒரு முக்கியமான மற்றும் பெரிய பிரச்சினையை எழுப்பியுள்ளாா்’ என்று தெரிவித்தனா்.

இதையடுத்து, மனுதாரா் வழக்குரைஞா் மனுவை திரும்பப் பெறுவதற்கு நீதிபதிகள் அமா்வு அனுமதி அளித்தது. முன்னதாக, மனுதாரரான டில்லி உயா்நீதிமன்ற மேனாள் நீதிபதி

எஸ்.என்.திங்ரா ‘அரசியல் கட்சிகளின் இலவசங்கள் குறித்த அறிவிப்பானது ஒட்டுமொத்த தோ்தல் செயல்முறையையும் உச்சநீதிமன்றம் வகுத்த சட்டத்தையும் மீறுவதாக உள்ளது என்றாா்.

இலவசங்களை விநியோகிப் பதற்காக அரசியல் கட்சிகளால் வாக்காளா்களின் தரவுகளை சேகரிப்பது தொடா்பான மற்றொரு பிரச்சினையையும் மனு எழுப்பியதாக அவரது வழக்குரைஞா் கூறினாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழக்குரைஞா், அஸ்வினி குமாா் உபாத்யாய் வழக்கில் உள்ள இலவசங்கள் தொடா்பான பிரச்சினையை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பரிசீலித்து வருவதாகக் கூறினாா்.

சமய் யான் (சஷக்த் சமாஜ்) அமைப்பின் தலைவராக நீதிபதி எஸ்.என். திங்ரா தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கையில், ‘ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய அமைச்சர் மகிளா சம்மன் யோஜனா, பாஜகவின் மகிளா சம்ரிதி யோஜனா மற்றும் காங்கிரஸின் பியாரி தீதி யோஜனா போன்ற திட்டங்கள் தோ்தலுக்குப் பிறகு பெண்களுக்கு நேரடி பணப் பலனை அளித்து, தோ்தல் சட்டங்களை மீறியதாகவும், இது தோ்தல் வாக்குறுதிகள் வடிவில் லஞ்சம் கொடுப்பதாகவும் உள்ளது.

இத்தகைய பண அடிப்படையிலான திட்டங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை என்றும், சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல்களின் உணா்வுக்கு எதிரானவை என்றும் அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *