அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தை விடுவிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு கற்பித்தலுக்கான இறுதிக்கட்ட மானியம், பராமரிப்பு மானியத்தை விடுவிக்கும்படி வட்டார கல்வி அலுவலர்களை அறிவுறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

பக்தியா? பலிபீடமா?
மகா கும்பமேளாவில் 79 பேர் பலி..
அதிர்ச்சித் தகவல்
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் அண்மையில் மிகப்பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் மட்டும் பலியானதாக உ.பி. மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் இது உண்மையில்லை என்றும், உண்மை பலி எண்ணிக்கையை அரசு மறைத்துவிட்டது என்றும் புகார் எழுந்துள்ளது. நெரிசலில் மொத்தம் 79 பேர் பலியாகி விட்டதாக பிரபல இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏன் தமிழ் ஆசிரியர்கள் இல்லை?
தி.மு.க. எம்.பி. கேள்வி
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றால்தான் நிதி தருவோம் என ஒன்றிய அரசு கூறும் நிலையில், இதுகுறித்து திமுக எம்.பி. அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் மும்மொழி தேவை என பாஜக சொல்கிறது. அப்படியென்றால், எத்தனை மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் இருக்கிறது? அவ்வளவு ஏன்.. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நடத்தும் பள்ளிகளில் கூட ஏன் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என அவர் கேள்வியெழுப்பினார்.

425 மருந்தாளுநா் காலிப் பணியிடங்கள்
மார்ச் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை,பிப்.18- அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 425 மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (பிப்.17) முதல் தொடங்கியது
அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநா் பணியிடங்கள் மருத்துவ பணியாளா் தோ்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
தகுதியான நபா்கள் மார்ச் 10-ஆம் தேதி வரை mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 500, மற்றவா்களுக்கு ரூ. 1,000 விண்ணப்பக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மருத்துவ பணியாளா் தோ்வு வாரிய இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *