முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
மதுரை, ஜூலை 13 கலைஞர் நூற்றாண்டு விழா 3.6.2023 அன்று தொடங்கி நாடெங்கும் பெரும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைத்தவர் கலைஞர். அடுத்து வந்த ஆட் சியாளர்களால் பராமரிப்பின்றி விடப்பட்டு, திருமண மண்டபமாக வாடகைக்கு விடும் அலட்சியப்போக்கு அரங்கேற்றப்பட்டு, அந்நூலகத்தை சீரமைத்து பராமரித்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தால் அவ்வப்போது எச்சரிக்கை விடப்பட்டதும் வரலாறாக உள்ளது. தற்பொழுது தமிழ்நாடு அரசுப்பணித் தேர்வாணையத் தேர்வுகள், இந்திய குடிமையியல் பணிகளுக்கான தேர்வுகளுக்கு ஆயத்தமாகின்ற ஏழை,எளிய வகுப்புகளைச் சேர்ந்த பல்துறை மாணவச் செல்வங்களும் இணைய வசதிகளுடன் நூலகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேற்றப்பாதையை எட்டிட அரிய வாய்ப்பாக அமைந்துள்ள சிறப்பிடம் பெற்றுள்ளது அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என்றால் மிகையாகாது.
கவின்மிகு நூலக வளாகம்
அதைப்போன்று வரலாற்று சிறப்புமிக்க கவின்மிகு நூலக வளாகம் கலைஞர் நூற் றாண்டு நூலகம் மதுரையில் உருவாக்கப்பட் டுள்ளது. மதுரை புது நத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப் படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப் பட்டு அதன் கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. முத்தமிழறிஞர் கலைஞரால் கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவிக்கப்பட்ட கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாளான 15.7.2023 அன்று சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைக்கிறார்.
பல்வேறு சிறப்பம்சங்களுடன்…
கலைஞர் நூற்றாண்டு நூலகம் பல்வேறு சிறப்பம் சங்களுடன் ஆறு தளங்களில் கட்டப் பட்டுள்ளது. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாநாட்டுக் கூடம், மாற்றுத் திறனாளி களுக்கான பிரிவு, முதல் தளத்தில் கலைஞர் பிரிவு, பருவ இதழ்கள், நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், குழந்தை களுக்கான நூலகப்பிரிவு, இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, மூன்றாம் தளத்தில் தமிழ் நூல்கள்பிரிவு, ஆங்கில நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி பதிப்புகள் மற்றும் இதழ்கள் பிரிவு, நான்காம் தளத்தில் போட்டித் தேர்வுப் பிரிவு, கூரைத் தோட்டம், அய்ந்தாம் தளத்தில் அரிய நூல்கள் பிரிவு, மின் நூலகம், பல்லூடகப்பிரிவு, ஆறாம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, நூல் பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு சிறப்புக் கூறுகளுடன் அமைக்கப் பட்டுள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
விழா பேருரை….
15.7.2023 அன்று மாலை 5மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கலைஞர் நூற் றாண்டு நூலகத் திறப்பு விழா பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வரவேற்புரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு முதுலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலகத்தைத் திறந்து வைத்து விழாப் பேருரை ஆற்றுகிறார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எச்.சி.எல்.குழும நிறுவனர் ஷிவ்நாடார், எச்.சி.எல்.குழுமத் தலைவர் ரோஷினி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். விழாவில் அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சான்றோர் பெருமக்கள் கலந்துகொள்கின்றனர். பொதுப்பணித்துறை-அரசு முதன்மைச் செயலாளர் மருத்துவர் பி.சந்திரமோகன் நன்றி கூறுகிறார். நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெறுகிறது.