பழையவலம், பிப். 17- திருவாரூர் சுயமரியாதை சுடரொளி பொன். தேவநாதனின் நினைவு நாளான 14.2.2025 அன்று நினைவு கல்வெட்டு திறந்து கழக கொடியேற்றி தொடர்ந்து தெருமுனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பொன். தேவநாதன் மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததன் நினைவாக பழையவலத்தில் கல்வெட்டு அமைத்து கழக கொடி ஏற்றப்பட்டது
கல்வெட்டினை மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ் மற்றும் பழையவலம் இ.கே.முருகேசன் முன்னிலையில் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன் திறந்து வைத்தார், கும்பகோணம் மாவட்ட காப்பாளர் தாராசுரம் இளங்கோவன் கழக கொடியை ஏற்றி வைத்தார். இந் நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி, கவுதமன், ராஜேந்திரன், பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமி, ஜெயராமன், நன்னிலம் ஒன்றிய தலைவர் தனராஜ், திருவாருர் மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, சரஸ்வதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மண்டோதரி, சு. பிரியா, ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி, சென்னையிலிருந்து பெரியார் மாணாக்கன், இசையின்பன், இறைவி, பூவை செல்வி, தொண்டறம் ஆகியோர் கலந்து கொண்டனர்
பழையவலம் கடைவீதியில் தெருமுனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது, கழக பேச்சாளர் இரா. பெரியார்செல்வன் சிறப்புரை ஆற்றினார், திரு.வி.க. கலை கல்லூரியின் டிஎஸ்எப் தலைவர் வே.அறிவழகன் தொடக்க உரையாற்றினார். பழையவலம் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.
தந்தையின் நினைவேந்தல் நிகழ்வை கொள்கை பிரச்சார நிகழ்வாக ஆக்கிய தேவ.நர்மதா இறுதியாக நன்றி கூறினார், இந் நிகழ்ச்சியில் பொன். தேவநாதனின் இணையர் தேவ. கவிதா, மகள் தேவ. நந்தினி மருமகன் இரா.சந்தோஷ் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.