ஏன் சுயமரியாதை தேவை என்பதற்கு சில நாட் களுக்கு முன்பு நடைபெற்ற சுயமரியாதையின் முக்கியத் துவத்தை உணர்ந்த பெண்கள் குறித்த ஒரு பதிவு.
நிகழ்வு 1 :
தரும காரியத்தை விட சுயமரியாதை முக்கியம்
ஆப்பிள் தலைவரின் மனைவிக்கு நேர்ந்த அவமானம்
ஆப்பிள் என்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைவர் பெரும் செல்வந்தர், மியன்மார் சென்று தியானமுறையில் மூழ்கி பவுத்தத்தை தழுவுகிறார், அவரைத் தொடர்ந்து அவரது அனைத்து குடும்பமுமே பவுத்தம் தழுவுகிறது.
அவர் மறைந்த பிறகு அவரது மனைவி பல அறக்கட்டளைகள் துவங்கி உலகம் முழுவதிலுமுள்ள போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார்.
அவருக்கு அமெரிக்காவில் உள்ள யோகா சாமியார் ஒருவர் மகாகும்பமேளாவிற்கு வந்து கொடை அளியுங்கள் நீங்கள் செய்யும் கொடைகளை விட அது மிகவும் உயர்ந்தது கோடான கோடி மக்கள் வருவார்கள் ஸநாதனமும் பவுத்தமும் ஒன்றுதான் என்று பொய் சொல்லி அவரை அழைத்து வருகிறார்கள்.
அவர் ஹிந்து அல்லாதவர் என்பதால் அவரை முதலில் குளிக்கவைக்காமல் பல மணி நேரம் கடுங்குளிரில் காக்கவைக்கின்றனர்.
அவருக்கு முன்பாகவே அவரோடு அமெரிக்காவில் இருந்து வந்த யோகா சாமியார், அவரது உதவியாளர்கள் என அனைவருமே முழுக்குப் போடுகிறார்கள். காரணம் அவர்கள் பார்ப்பனர்கள், அதே போல் விடுதியில் இருந்து அவரை அழைத்துவந்த பார்ப்பனரான கார் ஓட்டுனரும் குளித்துவிட்டு வந்துவிட்டார். பின்னர் அவர் குளிக்க அனுமதிக்கப்பட்டார் இதனை அடுத்து தான் அவமதிக்கப்படுகிறேன் என்று தாமதமாக உணர்ந்த அவர் உடல் நிலையைக் காரணம் காட்டி உடனடியாக திரும்பிவிட்டார். அவரிடம் பல கோடிகளைச் சுருட்டலாம் என்று காத்திருந்த சாமியார்கள் கூட்டம் ஏதேதோ சொல்லித் தடுத்தும் அவர் தனது சுயமரியாதையே முக்கியம் என்று கூறி பூடான் சென்று அங்கிருந்து அமெரிக்கா திரும்பிவிட்டார்.
நிகழ்வு 2 :
சுயமரியாதை இல்லை என்றால்
அவர் பிணத்திற்குச் சமம்
நேகா ஷாலினி என்ற பாஜக பெண் பிரமுகர் தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிடுகிறார்.
அதில் 7 ஆண்டுகளாக பாஜகவிற்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் தந்து உழைத்தேன், ஆனால் இங்கே பெண்களுக்கு எள்ளளவு மரியாதை கூட இல்லை. எனது சுயமரியாதை முற்றிலும் உடைந்து போனது,
மனிதன் சுயமரியாதை இல்லை என்றால் பிணத்திற்குச் சமம் – நான் பிணமாக வாழ முடியாது. சுயமரியாதை உள்ள பெண்ணாக சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ இனி முயற்சிக்கிறேன்.
இனியும் நான் பாஜகவில் இருக்கமுடியாது. காரணம் எனது சுயமரியாதை பிணமாக கிடந்த எனக்கு உயிரூட்டி விட்டது. சுயமரியாதைப் பாதையில் இனி நான் செல்வேன் – எனக்கான பாதை அதுதான்,, ஆகையால் அனைத்துப் பெண்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது இதுதான். சுயமரியாதையோடு வாழுங்கள் இல்லையென்றால் பிணத்திற்குச் சமமாக வாழவைக்கப்படுவீர்கள் என்று கூறியுள்ளார்.
மேலே கூறிய இரண்டு பேருமே சுயமரியாதை என்ற சுடர் தீண்டியதால் அவர்கள் சுயமரியாதைப் பெருவாழ்வை தேர்ந்தெடுத்துள்ளனர்.
தமிழ்நாடு இன்றிலிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே சுயமரியாதை இயக்கம் கண்டது. அதனை துவக்கியவர் தந்தை பெரியார்.
சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்கள்:
* மூடப்பழக்க வழக்கத்தை ஒழித்தல்
* பெண்களை தாழ்வாக நடத்துதலை தடுத்தல்
* விதவை மறுமணம்
* தேவதாசி முறை ஒழிப்பு
* குழந்தை திருமணம் ஒழிப்பு
* வர்ணாசிரம முறை ஒழிப்பு
* மாநாட்டிற்குத் தலைமை ஏற்றவர் சவுந்தரபாண்டியன்
* முதல் சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் தன்னுடைய நாயக்கர் பட்டத்தை துறந்தார்.
* 1929 ஆம் ஆண்டு சுயமரியாதை மாநில மாநாடு கூட்டப்பட்ட வேண்டும் என்று கூறியவர் யார் – பட்டுக்கோட்டை அழகிரிசாமி.
* செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு நடந்த தேதிகள் – 17.2.1929 , 18.2.1929
* சுயமரியாதை மாநாட்டை அன்று தந்தை பெரியார் தமிழ்நாட்டில் நடத்தினார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி மற்றும் டில்லி பாஜக பிரமுகர் நேகா ஷாலினி போன்றோர் 100 ஆண்டுகளுக்குப் பிறகு சுயமரியாதையை, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் கண்ட கொள்கைகளை உணர்ந்து திருந்துகின்றனர்.
தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம் – மாநாட்டின் வெற்றி வட இந்தியாவின் இளம்பெண்களைச் சென்றடைய 100 ஆண்டுகள் ஆகி உள்ளது.
சுயமரியாதை மாநாடுகள் வடக்கேயும் அதிகம் தேவை.