தேனி, பிப். 16- தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் அழகர்சாமிபுரத்தில் 11.2.2025 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
நகர தலைவர் தி. ஆறுமுகம் தலைமையேற்று நடத்தினார். கிளை தலைவர் இப்ராகிம் பாட்ஷா வரவேற்புரை நிகழ்த்தினார். பக. மாவட்ட பொருளாளர் கருப்பண்ணன், நகர பொருளாளர் முருகன், அழகர்சாமிபுரம் கிளை. செயலாளர் மாரிமுத்து, துணைத் தலைவர் சையது சுல்தான் ஆண்டவர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்கள். நிறைவாக அ.மோகன் தேனி மாவட்ட செயலாளர் விளக்க உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ள புதிய உறுப்பினர்களை தேர்வு செய்து. பெரியகுளம் நகர அமைப்பாளராக முத்துவேல் பாண்டியராஜன் என்ற கண்ணன், அழகர்சாமி புரம் கிளைக் கழக துணைத் தலைவராக சிவராஜ் என்ற போஸ், துணைச் செயலாளராக துரைப்பாண்டி, அமைப்பாளராக சி.கே.பெருமாளையும் பொறுப் பாளர்களாக அறிவிக்கப்பட்டது.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பகுத்தறிவாளர் கழகமும் நம்மால் முடியும் நல சேவை சங்கமும் இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்த வேண்டும்,
கீழ வடகரை ஊராட்சி பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முறையான குடிநீர் வசதி, கழிவு நீர் அகற்றுதல், தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுதல் போன்ற அடிப்படை பிரச்சினைகளை செய்து தர கீழ வடகரை ஊராட்சி நிர்வாகத்தை அணுகி வலியுறுத்துவது,
பெரியகுளம் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் கழகத்திற்கு உறுப்பினர்களை சேகரித்து. போதைப் பொருள் ஒழிப்பில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கருத்தரங்கம் நடத்துவது,
மேற்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கீழ வடகரை கிராம அலுவலர் நாகராஜன், கட்டிடக் கலைஞர் வீராசாமி, சிவா, அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நிறைவில். வருகை புரிந்த அனைவருக்கும் தேநீர் வழங்கி கிளை பொருளாளரும் வழக்குரைஞருமான காமராஜர் நன்றியுரை ஆற்றினார்.