பூமியின் உயரமான சிகரம் எவரெஸ்ட் என்று அனைவருக்கும் தெரியும். அது கடல் மட்டத்தில் இருந்து 8.8 கிமீ உயரம் கொண்டது. ஆனால், சூரியக் குடும்பத்தில் எவரெஸ்டை விட 2.5 மடங்கு உயரம் கொண்ட சிகரம் ஒன்று உள்ளது. ஆம், செவ்வாய் கோளில் இருக்கும் ‘ஒலிம்பஸ் மான்ஸ்’ என்ற சிகரம் 21.9 கிமீ உயரம் கொண்டது. அடிப்பகுதியில் இதன் அகலம் 700 கிமீ. நடுவில் உள்ள வாய்ப்பகுதி மட்டும் 85 கிமீ. அடேங்கப்பா.!
பிரதமர் பாதுகாப்பு: 1 மணி நேர செலவு ₹5.58 லட்சம்
இந்தியாவின் மிக உயர்ந்த பாதுகாப்பு எஸ்.பி.ஜி. ஆகும். பிரதமர் உள்ளிட்ட வி.வி.அய்.பி.களுக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக நாளொன்றுக்கு ரூ.1.34 கோடியும், ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சமும் செலவாகும். ஆண்டுக்கு தோராயமாக ரூ.600 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் நிதியும் தனியாக ஒதுக்கப்படுகிறது. 2025-2026 நிதியாண்டில் ரூ.489 கோடி ஒதுக்கப்பட்டது.