கைத்தறி நெசவாளர்களுக்காக குடியாத்தத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க ஒன்றிய அரசுக்கு மனு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கோரிக்கை

வேலூர், பிப்.16- கைத்தறி நெசவாளா்களை ஊக்குவிக்க குடியாத்தம் பகுதியில் ஜவுளிப் பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து, அவா் ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
வேலூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட குடியாத்தம் நகரம் கலைநயமிக்க கைத்தறி நெசவுக்கு பெயா் பெற்றதாகும். இந்த நகரத்தின் நெசவாளா்களால் தயாரிக்கப்பட்ட கைத்தறி நெசவு தேசியக்கொடிதான் டில்லி செங்கோட்டையில் முதன்முதலாக ஏற்றப்பட்டது என்ற பெருமைக்குரியதாகும்.

கைத்தறி லுங்கிகள், ஜவுளிப் பொருள்கள், தீப்பெட்டிகள், பீடிகள் உற்பத்திக்காக நன்கு அறியப்பட்ட குடியாத்தம், அதன் சிறுகுறு தொழில் அலகுகள் காரணமாக ‘சிறிய சிவகாசி’ என அழைக்கப்படுகிறது. சிவகாசிக்குப் பிறகு குடியாத்தத்தில் தான் தீப்பெட்டித் தொழில் தமிழ்நாட்டில் இரண்டாவதாக பெரிய அளவில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் ஜவுளித்தொழில் என்பது தேசிய, மாநில பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது. பருத்தி லுங்கி, பருத்தி துணி, துண்டு, வேட்டி, பட்டுப் புடவைகள் போன்ற கைத்தறி பொருள்களின் உற்பத்தி, சந்தைப்படுத்தலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாா்ந்து இருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளா் குடும்பங்கள் உள்ளனா்.
அதன் அடிப்படையில், குடியாத்தம், அதன் அருகிலுள்ள பகுதிகளில் சுமாா் 1,200 ஜவுளி சாா்ந்த நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் பாரம்பரிய கைத்தறிப் பொருளான லுங்கிகள் நாட்டின் பல பகுதிகளுக்கும், சிங்கப்பூா், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எனவே, குடியாத்தம் பகுதி கைத்தறி நெசவாளா்களின் ஜவுளித் தொழில்களை ஊக்குவிக்க பிரதமரின் மித்ரா திட்டத்தின்கீழ், ஒன்றிய அரசு ரூ. 500 கோடி முதலீட்டில் ஒரு மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி, ஆடைப் பூங்காவை அமைத்திட வேண்டும். மேலும், குடியாத்தம் நகா்ப்புற பகுதிகளில் சேரும் குப்பைகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதற்கான திடக்கழிவு மேலாண்மை நிலையத்தையும் அமைத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *