தஞ்சாவூர், பிப். 16- 11-02-2025 மாலை 6.00 மணிக்கு மாநகர கழக சார்பில் ‘தந்தை பெரியார் பிறவாமலிருந்தால்’ என்ற தலைப்பில் நாஞ்சிக் கோட்டை அண்ணா நகரில் பரப்புரை கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்,திராவிடர் கழகம் இந்த நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் தனது உரையில் எடுத்துரைத்தார்.
தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கா.அரங்கராசன் தலைமையேற்று உரையாற்றினார். பகுத்தறிவுதாசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர துணை தலைவர் அ.டேவிட், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், விஜயன், த.கோவிந்தராசு, ஆகி யோர் முன்னிலை வகித்து உரை யாற்றினர். தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தொடக்கவுரையாற்றினார்.
மாநில மாணவர் கழக செயலா ளர் செந்தூரப்பாண்டியன், மாநில ப.க அமைப்பாளர் கோபு.பழனி வேல், கழக மாநில ஒருங்கிணைப் பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் ஆகியோர் கருத்து ரையாற்றினர்.
மாநில ப.க அமைப்பாளர் கோபு.பழனிவேல் கழகப்பாடல்களை பாடினார்.
மாநில கலைத்துறை செயலா ளர் சித்தார்த்தன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, இராமலிங்கம், தனபால், அழகிரி, குழந்தை கவுதமன், விக்கி, லட்சுமணன், தங்க. வெற்றிவேந்தன், கழக கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தீனா தாசன், பொறியாளர் சந்திரகாசன், மாநில ஊடக பிரிவு தலைவர் அழகிரிசாமி, பெரியார் கண்ணன், சுப்பிரமணியன், வஸ்தா சாவடி செந்தில், ஒக்கநாடு கீழையூர் துரை, தெற்கு நத்தம் சண்முகம் உள்ளிட்ட கழக தோழர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெ.ரவிக்குமார் நன்றி கூறினார்.