ஆத்தூர், பிப். 15- ஆத்தூர் கழகத்தின் சார்பாக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 9.2.2025 அன்று காலை 11 மணியளவில் தா வானவில் மாவட்ட காப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பங்கேற்ற பொறுப்பாளர்கள்
மாவட்ட தலைவர் ஆர்.சுரேஷ் இந்நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார். மாவட்ட காப்பாளர் வானவில் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாவட்ட காப்பாளர் இரா.விடுதலை சந்திரன், மாவட்ட செயலாளர் நீ சேகர், பொதுக்குழு உறுப்பினர் சி ஜெயராமன், மாவட்ட மகளிர் அணி தலைவர் அமிர்தம் சுகுமார், ஆத்தூர் நகர தலைவர் வே.அண்ணாதுரை, ஆத்தூர் நகர ஒன்றிய செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு தொடக்க உரை ஆற்றியவர் மாநில பொதுச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம் வா.தமிழ்பிரபாகரன், தலைமை கழக அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம் இரா மாயக்கண்ணன்..
கலந்துகொண்டோர்
இந்நிகழ்வில் வ.முருகானந்தம், அறிவுச்செல்வன், சிங்கிபுரம் கூத்தன் செல்வம் வேணுகோபால், தும்பல் அங்கமுத்து, நரசிங்கபுரம் மணி, ரமேஷ், மருத பழனிவேல், சி.அர்ஜுனன், பெரியார் பெருந்துண்டார் ஏ.வி.தங்கவேல், இலுப்பநத்தம் பெரியசாமி, பொறியாளர் அருண், தம்மம்பட்டி வீராசாமி, கலைவாணன் தபால் துறை மருத்துவர் சமதர்மம், சிறப்பு அழைப்பாளர்கள் சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தீர்மானங்கள்:
பெரியார் உலகத்திற்கு 5 லட்சம் ஆத்தூர் கழக மாவட்டத்தின் சார்பில் நிதி திரட்டுவது
திராவிடர் கழகத்தின் சார்பில் 50 ஆண்டு சந்தாக்களும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 15 விடுதலை சந்தாக்களும் மொத்தம் 65 விடுதலை சந்தாக்களை பொதுக்குழுவில் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெரியார் பெருந்தொண்டர் ஏ.வி.தங்கவேல் ஓர் ஆண்டிற்கான விடுதலை சந்தாவை அவரது 103 வது பிறந்த நாளை முன்னிட்டு வழங்கினார்.
ஆத்தூர் நகர தலைவர் வே.அண்ணாதுரை இரண்டு ஆண்டுக்குரிய விடுதலைச் சந்தா ரூபாய் 4000 வழங்கினார்.
சிங்கிபுரம் கூத்தன் அவருடைய 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு ரூபாய் 500 வழங்கினார். அ.அறிவுச்செல்வன் நன்றி கூறினார்.