கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
15.11.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ம.பி. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். 2018இல் காங்கிரஸ் வெற்றியை பாஜக ஆள்பிடிப்பு மூலம் திருடிக் கொண்டது, தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி! தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற நிதி விவரத்தை இன்றைக்குள் தர கெடு – அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*”2018இல் நீங்கள் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தேர்ந்தெடுத்தீர்கள். அவர்கள் (பாஜக) காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைக் கவர்ந்து, அதைக் கவிழ்க்க லஞ்சம் கொடுத்தனர்” என்று ம.பி. தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு.
* ஊடகங்களை வாயடைக்க மோடி அரசு முயற்சிப்பதாக, ‘மணிப்பூர் எஃப்அய்ஆர்’ என்ற நூலை வெளியிட்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு.
தி இந்து:
* பிரதமரின் கிஷான் திட்டத்தில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு ரூ.2000 வழங்க மோடி அரசு முடிவு. தேர்தல் விதிகளுக்கு முரணானது என எதிர்க்கட்சிகள் கண்டனம்.
* பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணிக்கு, ஜாதிவாரி கணக்கெடுப்புத் தரவுகளைப் பயன்படுத்தி, சமூக நீதி நிகழ்ச்சி நிரலுக்குப் புத்துயிர் அளிக்கவும், வழங்கவும் ஒரு புதிய வகை அரசியலைத் தொடங்க வாய்ப்பு உள்ளது என்கிறார் சதீஷ் தேஷ்பாண்டே.
தி டெலிகிராப்:
* செல்வம் மற்றும் வருமானத்தில் இந்தியாவின் பொருளாதார ஏற்றத்தாழ்வு உலகிலேயே மிக அதிகமாக உள்ளது. மா நில வாரியாக 45 சதவீத மக்களில் 65 சதவீதம் ஏழ்மையில் உள்ளனர் என அய்க்கிய நாடுகள் வளர்ச்சி திட்ட அமைப்பு (யு.என்.டி.பி) அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி, இந்தியா வளர்ச்சியடைந்து விட்டது என்ற மோடியின் பேச்சு வெற்றுப் பேச்சு என்கிறது தலையங்கம்.
* ம.பியில் பாஜக ஆட்சியில் 500 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறினாரே; அதை எங்காவது பார்த்துள்ளீர்களா? என மக்களைப் பார்த்து ராகுல் கேள்வி.
– குடந்தை கருணா