புதுக்கோட்டை – ஆலங்குடி பகுதியில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் (14.2.2025)

viduthalai
2 Min Read

திராவிடர் கழகம்

பெரியார் பெருந்தொண்டர் புதுக்கோட்டை பெ. இராவணன் படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் அரு. வீரமணி, தங்கமணி (தி.மு.க.) உரத்தநாடு இரா.குணசேகரன், இரா.ஜெயக்குமார், அறிவொளி, மாரிமுத்து, செந்தூர்பாண்டியன், குமார், இராவணன் வாழ்விணையர் சின்னாத்தாள், மீனா திருப்பதி, நாகமணி, மேகநாதன் – சரவணா தேவி, வான்மதி, செல்வா, ஈ.வெ.ரா.மணி, முத்துச்செல்வி, அருண்குமார், தமிழருவி, இமயவரம்பன், பெரியதம்பி கண்டியர், பழனியாயி, ராமுக்கண்ணு, மதிவதனி, செங்கவி, தேனருவி, கனிமொழி, பிரபாகரன், ஓவியா, இலக்கியா, வெண்மதி, எழிலரசி, சிந்தனைச்செல்வன், வினோதினி, அபர்ணா, அங்கவி, வதனா கார்குழலி, புகழேந்தி நிகழ்வில் பங்கேற்றனர். பெ. இராவணன் குறித்த ‘அப்பாவின் பெரியாரியப் பயணம்’ என்ற நூலை அவரது மகள் மீனா தொகுத்துள்ளார். அதனை தமிழர் தலைவர் வெளியிட தி.மு.க. சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் த.சந்திரசேகரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். குறிப்பு: சுயமரியாதைச் சுடரொளி பெ. இராவணன் நினைவைப் போற்றும் வகையில் அவரது மகள் மீனா படித்த தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பெ. இராவணன் பெயர் பொறித்த நினைவுப் பெயர் பலகை வைக்கப்படும் என்று தமிழர் தலைவர் தமது நினைவேந்தல் உரையில் குறிப்பிட்டார்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. குணசேகரன், இரா. ஜெயக்குமார், மாணவர் கழக மாநில அமைப்பாளர், இரா. செந்தூரபாண்டியன், அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க. மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் ச. குமார், புதுகை மாவட்டத் தலைவர் மு. அறிவொளி, காரைக்குடி மாவட்டத் தலைவர் வைகறை, பொதுக் குழு உறுப்பினர்கள் சவுந்தரராசன், வே. அமுதா, புதுகை மாவட்டத்துணைத் தலைவர் சு. கண்ணன், மாநில வீர விளையாட்டுக் கழக க. முத்து, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் அ. சரவணன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் அ. தர்மசேகர், அறந்தாங்கி மாவட்ட துணைத் தலைவர் ப. மகாராஜா, புதுகை நகரச் செயலாளர் அரஸ் இளங்கோ, அறந்தாங்கி நகரத் தலைவர் ஆ. வேல்சாமி, மாவட்டத் துணைத் தலைவர் குப்பக்குடி இளங்கோ, பேராவூரணி நீலகண்டன், பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் வீ. மாவலி, பொன்னமரவதி இளைஞர் அணி செயலாளர் மா. விநாயகமூர்த்தி, புதுக்கோட்டை சேகர், புதுகை நகரத் தலைவர் ரெ.மு. தர்மராசு, மாவட்டச் செயலாளர் காரைக்குடி செல்வமணி, ப.க. மாவட்ட அமைப்பாளர் ந. அம்பிகாவதி, மாணவர் கழகச் செயலாளர் குட்டி வீரமணி, ஆலங்குடி நகரத் தலைவர் நெடுஞ்செழியன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் சிதம்பரம் மற்றும் ஏராளமான பொது மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். புதுக்கோட்டை த.சந்திரசேகரன் (தி.மு.க.) மற்றும் பல்வேறு கட்சிப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *